Monday 27 April 2015

ருண விமோசன ஸ்தோத்ரம்

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரை
நம்பிக்கையோடு துதியுங்கள்

கடன் இருந்தால் நீங்கிவிடும்.
கடனில்லாமல் வாழ்க்கை நடத்தலாம்
ஆபத்துகள் விலகும்.
பாப க்ரஹங்களினால்
துன்பம் ஏற்படாது
மனதில் பயம் நீங்கும்.
முடிவில் சத்யம் என்ற
ஞானமும் சித்திக்கும்.
முக்தியும் கிடைக்கும்.
இது சத்தியம்.
மிக எளிமையான ஸ்தோத்ரம்
எத்தனை முறை
வேண்டுமானாலும் சொல்லலாம்.

தேவதா கார்ய சித்யர்த்தம்
சபாஸ் ஸ்தம்ப சமுத்பவம்
ஸ்ரீ ந்ருசிம்மம் மகாவீரம்
நமாமி ரிணமுக்தயே
லக்ஷ்ம்யாலிந்கித வாமாங்கம்
பக்தாநாம் வர தாயகம்
ஸ்ரீ ந்ருசிம்மம் மகாவீரம்
நமாமி ரிண முக்தயே
ஆந்த்ரமாலாதரம்
சங்க சக்ராப்யுததாரினம்
ஸ்ரீ ந்ருசிம்மம் மகாவீரம்
நமாமி ருண முக்தயே
ஸ்மரணாத் சர்வ பாபக்னம்
கத்ரூஜ விஷ நாசனம்
ஸ்ரீ ந்ருசிம்மம் மகாவீரம்
நமாமி ரிண முக்தயே
சிம்ஹநாதென மஹதா
திக்தந்தி பயநாசனம்
ஸ்ரீ ந்ருசிம்மம் மகாவீரம்
நமாமி ரிண முக்தயே
ப்ரஹ்லாத வரதம்
ஸ்ரீசம் தைத்யேசவர விதாரிணம்
ஸ்ரீ ந்ருசிம்மம் மகாவீரம்
நமாமி ரிண முக்தயே
க்ரூர க்ரஹை பீடிதானாம்
பக்தானாம் அபயப்ப்ரதம்
ஸ்ரீ ந்ருசிம்மம் மகாவீரம்
நமாமி ரிண முக்தயே
வேத வேதாந்த யக்னேசம்
பிரம்ம ருத்ராதி வந்திதம்
ஸ்ரீ ந்ருசிம்மம் மகாவீரம்
நமாமி ரிண முக்தயே
ய இதம் படதே நித்யம்
ருண மோசன சம்ஜிதம்
அன்றிநி ஜாயதே
சத்யோ தனம் சீக்ரமாப்னுயாத்
2)உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் 
ஜ்வலந்தம் சர்வதோமுகம் 
ந்ருசிம்மம் பீஷணம் பத்ரம் 
ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்.


சர்வ தோஷ நிவாரண ஸ்லோகம் 

ஓம் க்லீம் க்ருஷ்ணாய ஹ்ரீம் கோவிந்தாய ஸ்ரீம் கோபி
ஜனவல்லபாய ஓம்பராய பரமபுருஷாய பரமாத்மனே!
மமபரகர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர ஒளஷத அஸ்த்ர
ஸஸ்த்ர வாதப்ரதிவாதானி ஸம்ஹர ஸம்ஹர
ம்ருத்யோர் மோசய மோசய ஓம் நமோ பகவதே மஹா சுதர்சனயா
தீப்த்ரே ஜ்வாலா பரிவ்ருதாய ஸர்வதிக் ஷோபன
கராய ஹும்பட் ப்ரஹ்மணே பரம்ஜோதிஷே ஸ்வாஹா
ஓம் மஹா சுதர்சன தாராய நம இதம்
அகத்திய பெருமான் அருளிய சனைச்வர ப்ரீத்தி
கோனவனார் குடியிருந்த பிடரிதன்னில்
கொள்கிநின்றார் சனியனெனும் பகவான்றானே
தானென்ற சனிபகவான் பிடரிமேலே 
தானேறி நின்று கொண்டு தலைகால் வேறாய்
கோனென்ற அறிவுதனை நிலைக்கொட்டாமல்
குடிலமென்ற குடிலமெல்லாங் கூறாய்ச் செய்து
நானென்ற ஆணுவமே நிலைக்கப்பண்ணி
நன்னையென்ற வெளிகளெல்லா மிருளாய்க் கட்டி
கானென்ற கபடமதுக் கேதுவாய் நின்று
கரையேற வொட்டாமல் கருதுவானே
கருதுகின்ற சனிபகவான் பிடரிமேலே
கவிழ்ந்து நின்ற பாசமதைக் களையவேண்டி
சுருதி பொருளானதொரு நாதன்பாதம்
தொழுதுமன துறுதியினால் துகளறுத்து
நிருதியெனுஞ் சாபமது நிவர்த்தியாக
நீமகனே சொல்லுகிறே னன்றாய்க்கேளு
பருதிஎனும் ரவிதனையே நமஷ்கரித்து
பாங்குடளே ஓம் கிலி சிவவென்று சொல்லே
சொல்லிடுவாய் தினம்நூத்தி யிருபத்தெட்டு
சோர்வின்றி மண்டலமே செபித்தாயாகில்
வல்லுடும்பாய் நின்றசனி மாறிப்போகும்
மகத்தான மந்திரமுஞ் சித்தியாகும்
அதிகாலை குளித்து முடித்து கிழக்கு நோக்கி நின்று கொண்டு பருதி எனும் சூரிய பகவானை வணங்கி ``ஓம் கிலி சிவ'' என்ற மந்திரத்தை 128 முறை செபிக்கவும். இப்படி ஒரு மண்டலம்- 48 நாட்கள் தொடர்ந்து செபித்து வர உடும்பு போல் பற்றி நின்ற சனீஸ்வர தோஷம் விலகி விடும். இது ஏராளமானோர் செய்து பயனடைந்த முறை.

இராம நாம மந்திர மகிமை
இராம நாம மந்திர மகிமை
நம் பாரத தேசத்தின் மகத்தான இதிகாச காவியங்களில் ஒன்று மகாபாரதம் (வியாசர்), மற்றொன்று இராமாயணம் (வால்மீகி). நாராயணனின் ஒன்பது அவதாரங்களில் இராமாவதாரம், கிருஷ்ணாவதாரம் என்பன தனிச்சிறப்புடையது. ஏழாம் அவதாரம் இராமாவதாரமும், எட்டாம் அவதாரம் கிருஷ்ணாவதாரமுமாகும். ஸ்ரீகிருஷ்ணாவதாரத்தில் ஸ்ரீகிருஷ்ணன் தான் ஓர் அவதார புருஷன் என்றும், தன்னைக் கடவுள் என்றும், பரமாத்மா என்றும் பிரகடனப் படுத்திக் கொண்டார். “எவன் ஒருவன் தன்னைச் சரணடைகிறானோ அவனை ரட்சிப்பதே இந்த அவதார நோக்கம் என்றும், எவன் ஒருவன் அக்கிரமங்களும், அநியாயங்களும், செய்து அரக்கத்தனமாகவும், அசுரத்தனமாகவும் நடந்து கொள்கிறானோ அவனை வதம் செய்வதற்காக யுகாந்தரம் பிறப்பேன் என்றும் கீதையில் வாக்தத்தம் செய்திருக்கிறார்.
இராமாவதாரத்தில் ஸ்ரீஇராமன் அவதாரமானாலும், மனுஷனாகவே நடந்து, ஒரு மனிதன் எவ்வாறு நடக்க வேண்டும் என்பதற்கு உதாரண புருஷராக இருந்து, மகா நியாயவாதியாக, சத்தியம், தர்மம் கடைப்பிடிப்பவராக கடைசிவரைக்கும் வாழ்ந்து காட்டினார்.
பதினெண் புராணங்களையும், இதிகாச காவியமான மகாபாரதத்தையும் வியாசமகா முனிவர் எழுதினார் என்பதும், இந்த இராமாயண இதிகாசத்தை மட்டும் ஸ்ரீவால்மீகி முனிவர் எழுதினார் என்பதும் வரலாறு. வியாச பகவானே இந்த இராமாயண இதிகாச காவியத்தை எழுதியிருக்கலாம். அதை ஏன் வால்மீகி முனிவர் எழுத வேண்டும்? அங்குதான் இராம நாம மகிமை பளிச்சிடுகிறது.
வியாசபகவானோ, மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று சொல்லப்படுகிறது. இதற்கு சகஸ்ரநாமத்தில், “வியாசாய விஷ்ணு ரூபாய, வியாசரூபாய விஷ்ணவே” என்று ஆரம்ப சுலோகத்தில் சொல்லப்படுவதால் வியாசரின் மகிமையும், புலமையும் புலப்படுகின்றன. பல புராணங்கள் எழுதிய வியாசமுனிவர் இராமாயண மகாகாவியம் எழுதாது, வால்மீகி முனிவரால் எழுதப்பட்டது ஏன்? அதன் காரணம் இராமாயண காவியத்தை இயற்ற இராமநாமாவின் சக்தியால்தான் முடியும் என்பதை உணர்த்தவே நாரத மகாமுனி வழி வகுத்து வழிகாட்டுகிறார்.
வால்மீகி பூர்வஜன்ம வாழ்க்கையில் வேடுவனாக, கொள்ளைக்காரனாகப் பிறந்தவர்தான். பிரியம் வைத்த ஆசை நாயகிக்காக எதையும் செய்யும் குணமுடையோன். அவனின் ஆசை மனைவிக்காக கொலை, கொள்ளை செய்து எடுத்து வந்த விலையுயர்ந்த ரத்தினங்களையும், வைரங்களையும், தன் மனைவிக்கு அணிவித்து அழகு பார்த்தவன்.
ஒரு நாள் காட்டில் சாதாரணமாக மகா தபஸ்வியான நாரதமுனிவர் அவனைச் சந்தித்தார். நியாயமாக, மகா தபஸ்வியான முனிவர்களை, நாம் போய் சந்திப்போம். இங்கு முனிவரே சந்தித்தார். அவனும் காட்டில் வாழ்பவன் தானே! அதே காட்டில் ஒரு முனிவரை சந்தித்தான் என்பதுதான் அவனுக்குத் தெரியும். அவர் மகாதபஸ்வி, ஞானி, நாரத மகாமுனிவர், திரிலோக சஞ்சாரி என்பதெல்லாம் அந்த மூடனுக்குத் தெரியாது. அவன் அறிந்திட முயலவுமில்லை. அவன் அறிந்ததெல்லாம் மது, மாது, பொன், பொருள் ஆகியவைதான். அவனிடம் முனிவர் கேட்ட முதல் கேள்வியே “நீ ஒரு கொள்ளைக்காரன். கொள்ளைக்காக, கொலையும் செய்கிறாய். கொள்ளையடித்ததை, உன் ஆசை மனைவிக்கு அன்புடன் கொடுக்கிறாய். அதில் ஆனந்தமும் சந்தோஷமும் அடைகிறாய். அவளும் அதை ஏற்று, உன்னை சந்தோஷப்படுத்தி இன்பங்களை வழங்குகிறாள். இவ்வாறு நடப்பது உண்மைதானே?
“இந்தக் கொள்ளையும் கொலையும் பாபம் என்று உனக்குத் தெரியுமா? வேட்டையாடுவது தான் உன் தொழில். கொள்ளையடிப்பது, கொலை செய்வது உன் தொழில் அல்ல. அதனால் பாபங்கள் உனக்கு வந்தடையும். இதை அவளிடம் “நான் செய்யும் கொலை கொள்ளைகளால் எனக்குப் பாபம் சம்பவிக்கிறது. இந்தப் பாபத்தில் உனக்கும், பந்தமும், கட்டும், கூட்டும் உண்டல்லவா? ஏனெனில் இது உனக்காகச் செய்யப்படும் ஈனச் செயல்கள். அதனால் என் பாபத்தை நீயும் சமபங்கு போட்டுக் கொள்ள வேண்டுமல்லவா?” என்று அவளிடம் சொல். அதன் பின் நாள் உனக்கு நல்வழி காட்டுகிறேன்.” என்று சொல்லிச் சென்றுவிட்டார்.
அந்த வேடுவனும் தன் ஆசை மனைவியிடம் சென்று நாரதர் சொன்னதை அப்படியே வரி விடாமல் சொன்னான். அவளோ, “நீ செய்யும் பாபங்களில் எனக்குப் பங்கில்லை. நான் எப்படிச் சம பங்குகொள்ள முடியும்? உன்னுடைய சுகத்திலும், இன்பத்திலும், புண்ணியத்திலும், வாழ்விலும், சமபங்கு கொள்வேனேயல்லாது, உன்னுடைய அதாவது நீ செய்யும், கொலை, கொள்ளை அதனால் ஏற்படும் பாபத்தில் எனக்குப் பங்கில்லை. ஆனால் புண்ணியத்தில் பங்கு கொள்வேன்” என்று ஆணித்தரமாகப் பதில் சொன்னாள்.
ஓடிவந்தான் அதே இடத்திற்கு, மனம் பதறிப் போய், அந்த வேடுவன் அங்குமிங்கும் அந்த கானக முனிவரைத் தேடினான். கண்ணும் நாலாபக்கமும் அலைந்து தேடியது. அதுதான் குருவை நாடித்தேடி ஓடி வருகிறான். ஆத்ம ஞானம் அடைந்திட. அவனும் கண்டான் முனிவரை. “வேடுவனே! நான் உன்னிடம் சொன்னதை உன் ஆசை மனைவியிடம் கேட்டாயா?”
“கேட்டேனே பலமுறை. அவள் பதில் ஒன்றுதான். நான் கொலை கொள்ளை செய்யும் பாபத்தில் அவளுக்குப் பங்கில்லையாம். என் புண்ணியத்தில் பங்கு கொள்வாளாம். ‘உன் பாபத்தை நான் பங்கு போட்டுக் கொள்ள முடியாது’ என்று திட்டவட்டமாகச் சொல்லி விட்டாள். அவளுக்காகத்தானே இந்தக் கொடிய தொழிலை மேற்கொண்டேன்? அவளைச் சந்தோஷப்படுத்தவும், அவள் மனம் ஆனந்தப்படவும் தானே, கொள்ளைப் பொருள்களை பரிசாக அவளுக்கு அளித்தேன்? அப்படியிருக்க அவளுக்கு யாதொரு சம்பந்தமும், பந்தமும் இல்லையென்று சொல்லிவிட்டாளே. இதை நான் எங்கே போய்ச் சொல்லி முட்டிக் கொள்ள முடியும்? இனிமேல் இனி எனக்கு என்ன உள்ளது. அதனால்தான் உங்களை நாடி ஓடி வந்தேன். இனி ஒரு வருமில்லை எனக்கு. நான் கடைத்தேறிட வழி சொல்லுங்கள். கேள்வி கேட்கச் சொன்னவரே நீங்கள்தான். இதற்கும் நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும். நீங்கள்தான் இனி எல்லாம்” என்று அவர் காலைத் தொட்டுக் கும்பிட்டான்.
அவனை அறியாமலேயே, அவன் குருவை சரணாகதம் அடைந்துவிட்டான். அவனுக்கு வழி காட்ட வேண்டிய பொறுப்பு நாரதருக்கு வந்தது. நாரதர் சொன்னார், “வேடுவனே! உலகில் ஒன்றும் நிலையில்லை. மனைவி மக்கள், சுற்றம், பொன், பொருள், இந்த உடல் எல்லாம் என்றேனும் ஒரு நாள் அழிந்து விடக்கூடியது. ஆனால் ஒரே ஒரு பொருள் மாத்திரம் அழியாதது, அழிவில்லாதது. அந்தப்பொருளை உனக்கு நான் தருகிறேன். அதை கெட்டியாக உன் மனத்தில் பற்றிக் கொள்.” என்றார்.
“அது என்ன பொருள் சாமி? நீங்க தந்துவிட்டாலோ, சொல்லிவிட்டாலோ, அதை உடும்பாகப் பற்றிக் கொள்கிறேன். அகப்பட்டதைப் பற்றும், உடும்பு போல பத்திரமாகப் பாதுகாப்பேன் மனத்தில்.” என்றான் வேடுவன்.
நாரதர் “உன் காதைக் காட்டு சொல்லுகிறேன்.” என்றார்.
அவர் “ராமா’ என்ற நாமம் மிகச் சிறந்தது. அதைத் திரும்பத் திரும்ப இரவு பகல் பாராமல் நாள்தோறும் சொல்லிக்கொண்டிரு. அதுவே உனக்கு அபயம் அளிக்கும்.” என்றார்.
“ஐயா சாமி! நீங்க சொல்றது ஒன்றும் புரியலையே! இன்னொரு முறை நினைவு கொள்ளும்படியாகச் சொல்லுங்கள்” என்றான். உடன் அவர், “நீ வேடுவன்தானே! அதோ தெரிகிறதே ஒரு மரம் அது என்ன மரம் தெரியுமா?”
“ஓ! தெரியுமே அது மராமரம்.”
“அந்த மராமரத்தின் பெயரையே உச்சரித்துக் கொண்டிரு. அது போதும். உன் முக்திக்கு வழி காட்டும்” என்று சொல்லிச் சென்றுவிட்டார் நாரதர்.
அந்த மராமரத்தின் அடியில் சென்று அமர்ந்தான். “மரா மரா” என்று அதையே உச்சரித்தான். அது ‘ராம ராம’ என மாறியது. பசிதாகம், வெயில், குளிர், மழை எல்லாம் மறந்தான். வசந்தங்கள் மாறின. தக்ஷிணாயனம், உத்தராயனம் மாறின. வருஷங்கள் மாறின. கோலங்களும் காலங்களும் மாறின. மரத்தடியில் தவம் செய்து வந்த இடத்தில் புற்றும் வளர்ந்தது. ஒரே ‘ராம’ சப்தம் தவிர வேறு ஒன்றும் கேட்வில்லை. ஒரு நாள் அகோர மழையில் புற்றும் முற்றும் கரைந்தது. புற்றிலிருந்து தவம் செய்த வேடுவன் நரை தோன்ற தாடி மீசையுடன் வெளிவந்தான்.
அங்கு நாரத மகாமுனி தோன்றினார். புற்றிலிருந்து வெளிப்பட்டதால் வான்மீகி என்று அவனுக்குப் பெயர் சூட்டினார். ராம நாமத்தை பற்பல வருடங்கள் தியானமும், தபமும் செய்தவர் வால்மீகி முனிவர். “இன்று முதல் நீவிர் வால்மீகி மகரிஷி ஆவீர்கள். ராம நாமத்தால் இந்தப் பதவியை அடைந்தீர். நீரே ராம காவியத்தை எழுத வேண்டும் என்பதே நாராயணனின் கட்டளை. உமக்கு இராமபிரானின் சரிதங்களும், நிகழ்ச்சிகளும், நிகழ்வுகளும், சம்பவங்களும், கண்முன் காட்சிகளாகத் தோன்றும் அதைப் பார்த்து ரசித்து இராம காவியத்தை வான்மீகி இராமாயணம் என்று இயற்றும்.” என்று நாரதர் அருள்புரிந்தார். அதன்பிறகு வால்மீகி முனிவர் எழுதிய இராமாயணத்தைத் தான் இன்றும் நாம் கேட்கிறோம். இதிலிருந்து ராம நாம மந்திரமகிமை புரியும். அந்த இதிகாசத்தை எழுத வைத்ததே ‘ராம மந்திரம்’தான்.
ராம நாமம் மிகச் சிறந்தது என்பதற்கு பாராட்டாக, வியாச மகாபாரதத்தில், ஸ்ரீபீஷ்மர் மரண அம்புப்படுக்கையில் படுத்திருக்கும் பொழுது, ஸ்ரீகிருஷ்ணனும், அர்ச்சுனனும் தர்மரும் காண வந்தார்கள். ஸ்ரீகிருஷ்ணனின் விஸ்வரூப தரிசனத்தைப் பீஷ்மர் கண்டு எல்லையில்லா ஆனந்தத்தில் ஆயிரம் நாராயண விஷ்ணு நாமாக்களை சொல்லி தோத்திரம் செய்தார். அந்த விஷ்ணு சகஸ்ரநாமத்தில் வரும் பலஸ்ருதியாக, சிவன் பார்வதிக்குச் சொல்வது போல் ஒரு ஸ்லோகம் வருகிறது.
“ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே, சகஸ்ரநாம தத்வல்யம் ஸ்ரீராம நாம வரானனே” என்பதாக வருகிறது. ஆயிரம் விஷ்ணு நாமாக்களை உன்னால் சொல்ல முடியாது போனாலும், அதில் வரும் இந்த ‘ராமா’ என்ற நாமத்தை மட்டும் ஜபித்தாலே போதும், அவன் ஆயிரம் விஷ்ணு நாமாக்கள் சொன்ன பலனை அடைகிறான்” என்று கூறுவதால், இந்த ராமநாமம் மகிமை பெற்றது. அப்படி சிவபெருமானே வாக்குறுதி அளிப்பதால் அந்த ‘ராம ராமா’ இன்னும் சிறப்புடையதாகிறது.
இராமாயணத்தில் ஒரு சம்பவத்தின் நிகழ்ச்சியால் ராம மந்திர மகிமையை உணரமுடியும். ஹனுமான், ஸ்ரீஇராமனின் சிறந்த பக்தர். சதா ராமநாமம் சொல்லும் மகா வியாகரண பண்டிதர். சிரஞ்சீவியான வாயுபுத்திரன். இராமனின் அடிமையான சேவகன். ராம நாமமே அவரின் உயிர் மூச்சு. ராம நாமம் ராம பாணத்தைவிடச் சிறந்தது என்று நிரூபித்தார்.
அப்படி பராக்கிரமசாலியான ஸ்ரீஆஞ்சனேயர், ஒரு சமயம் ஓர் அரசனுக்கு அடைக்கலம் கொடுத்தார். அவனை எந்த சக்தியிடமிருந்தும் காப்பாற்றுவேன் என்று வாக்குறுதி கொடுத்தார். இராமபிரானே அந்த அரசனை ஆஞ்சனேயரிடமிருந்து மீட்க யுத்தம் மேற்கொண்டார். அது இராம ஆஞ்சனேய யுத்தமாக உருவெடுத்தது. ஆஞ்சனேயர் தன் வாலை சுருட்டியுள்ள கோட்டையில் அந்த அரசனை பத்திரப்படுத்தி, அந்த வாலின் அரியணையில் அமர்ந்து “ராம ராம” என்று தியானம் செய்து கொண்டிருந்தார். ராமபாணங்கள் எகிறின. ஆனால் அவை ஆஞ்சனேயரை ஒன்றும் செய்யாது, பூமாலைகளாக விழுந்தன. இராமரே முன்னின்று போர் நடத்தியும், ‘ராம நாம ஜபம்’ செய்த ஆஞ்சனேயர் தான் வெற்றியடைந்தார். அதை இராமரே ஒப்புக்கொள்கிறார். அந்த ராம மந்திரமே தாரக மந்திரமாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
இன்னோர் உபகதையும் உண்டு. இராமாயணத்திலே விபீடணன் புஷ்பக விமானத்தில் அயோத்தி மாநகருக்கு வந்து இராமபட்டாபிஷேகம் கண்டும், எல்லாரையும் கண்டு ஆனந்தித்தும், இலங்கைக்குச் செல்லும் வேளையில், விபீடணனின் அயோத்தி நண்பர் ஒருவர், தனக்கு அந்த இலங்கையைச் சுற்றிப் பார்த்திட ஆசையுள்ளது என்று சொன்னதால், புஷ்பகத்தில் அவனையும் அழைத்துக் கொண்டு இலங்கைக்குச் சென்றார். அரசரின் விருந்தினராக பலநாள்கள் இலங்கையில் தங்கி எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்த பின்னர், அயோத்திக்குச் செல்ல ஆசைப் பட்டான். உடன் அவன் “நான் எவ்வாறு கடல் கடந்து போக முடியும்?” என்று விபீடணனிடம் வினவ அதற்கு விபீடணன் “ஒரு மகா மந்திர ஓலையை உன் அரைக்கச்சத்தில் கட்டி விடுகிறேன். அது உன்னை கடலின் அக்கரைக்குக் கொண்டு சேர்க்கும்.” என்று சொல்லி மகா மந்திரம் எழுதிய ஓலையை அவனுடைய அரையில் கட்டி விட்டார். எக்காரணம் கொண்டும் அந்த ஓலையை வழியில் எடுத்துப்பிரித்துப் படிக்காமல் கரை சேரவும். கரை சேர்ந்ததும் கடலில் அந்த ஓலையை எறிந்து விடவும்” என்றும் சொன்னார். அப்படிப் பிரித்துப் பார்த்தால் வழியிலேயே கடலில் மூழ்கிவிடுவாய்.” என்றும் கூறினார்.
அவன் புறப்படும் சமயம் அந்த மந்திர ஓலையை நன்கு முடிந்து கொண்டான். கடற்கரையை அடைந்தான். ஒவ்வோர் அடியாக கடலில் அடியெடுத்து வைத்தான். அவன் தரையில் நடப்பது போலவே உணர்ந்தான். பின் வேகமாகவும், ஓட்டமாகவும் நடந்து முன்னேறினான். பல காத தூரங்கள் கடந்து, இயற்கையையும் கடல் வாழ் ஜந்துக்களையும் ரசித்துக் கொண்டே நடந்து சென்றான். ‘எப்படிப்பட்ட மகாமந்திரம் இந்த ஓலைச் சுவடியில் உள்ளது! அது என்னை இந்த மகாசமுத்திரத்தையே கடக்க வைத்து விட்டதே! உண்மையிலேயே இது ஒரு மகாமந்திரம்தான். அதன் மகிமை பெரியதுதான்’ என்று வியந்தான்.
தூரத்தில் கரை தெரிய ஆரம்பித்தது. ‘இன்னும் சில காத தூரமே தானிருக்கிறது. நான் மந்திர ஓலையால் மா கடலை கடந்து வந்து விட்டேன்? அவனுக்குள் ஓர் ஆர்வம். இந்த மகா மந்திரம் என்னவாக இருக்கும். அப்படிப்பட்ட மகிமையுள்ள மந்திரத்தைத் தெரிந்து கொள்ள வேண்டாமா? என்று ஏற்பட்ட ஆவல் உந்துதலால் அந்த ஓலையை எடுத்துப் பிரித்து உரக்கவே படித்தான். அதில் ராம் ராம் என்று பலமுறை எழுதியிருந்ததைக் கண்டான். ஆச்சர்யத்துடன் ‘பூ’ இவ்வளவுதானா? இந்த ராம மந்திரம் தான் எனக்கும் தெரியுமே! இதில் ரகசியம் என்ன?’ என்று நினைப்பதற்குள், அவன் தண்ணீரில் மூழ்கினான். அந்த மந்திர ஓலை கையில் இருந்ததால் நீந்திக்கரை சேர்ந்தான் என்பது அதன் சுவாரஸ்யம். அதன் சாராம்சம் ‘ராம’ என்ற நாம மகிமைதான் காரணம். அதுதான் தாரக மந்திரமுமாகும்.
தியாகராஜ சுவாமிகள் மும்மூர்த்திகளுள் ஒருவர். தெலுங்கில் பல கீர்த்தனங்கள் எழுதி இசை உலகுக்குப் பெருமை சேர்த்தவர். இராமனுடைய கதைச் சம்பவங்களை வைத்தே பல பாடங்கள் புனைந்துள்ளார். இராமனையும், ராம நாமத்தையும் சிறப்பித்துப் பல பாடல்கள் தானே ரசித்து, பாடி, தோத்தரித்திருக்கிறார். அவர் தன்னுடைய கீர்த்தனையில் ‘ராம என்பது மகாமந்திரம். அந்த மந்திரம், சைவாகமத்திற்கும், வைஷ்ணவாகமத்திற்கும் உரியது. இரண்டும் கலந்த சேர்க்கைதான் ராம மந்திரம்’ என்று விளக்கியிருக்கிறார். அவர் ராம நாமத்தை தொண்ணூறு கோடி வரை ஜபம் செய்தவராம். இராமபிரானையே தரிசனம் செய்த மகாபுண்ணியவான்.
விஷ்ணுவும் சிவமும் கலந்த கலவை ராம நாமம் என்பதைச் சொல்லுகிறார். “ஓம் நமோ நாராயணாயா” என்று அஷ்டாட்சரத்திலிருந்துள்ள ‘ரா’ என்ற சப்தத்தையும், “ஓம் நமசிவாயா” என்ற பஞ்சாட்சரத்திலிருந்து ‘ம’ என்ற சப்தத்தையும் வேறுபடுத்தி விட்டால் “நாயணாயா” என்றும் “நசிவாயா” என்றும் மாறுபடும். அப்பொழுது அதன் அர்த்தமே அனர்த்தமாக ஆகிறது. அப்படியானால் இந்த இரண்டு நாமாக்களுக்கும் ஜீவனானது ‘ரா’வும் ‘ம’வுந்தான். அந்த இரு ஜீவன்களையும் ஒன்று சேர்த்தால் வருவதே ‘ராம’ மந்திரம். இந்த சப்த ஒலியினால் அந்த மந்திரம் மகாமந்திரம் என்று பெருமை உடையதாகிறது. இரு மத சாராருக்கும் இந்த மந்திரம் பொதுவாகிறது என்பதால் இதுவே ‘தாரக மந்திரமாகும்’. “தாரகம்” என்றாலே சம்சாரமான சாகரத்தைக் கடக்க வல்லது என்பதாகிறது. நம்மைக் கரையேற்றும் அல்லது கரை சேர்க்கும் மந்திரம் ‘ராம’ மந்திரம்.
ராம மந்திரம் முக்தி மோட்சம் ஆகியவற்றுக்குக் காரணமாகிறது. ஒருவர் இறக்கும் தறுவாயில் அவருடைய காதுகளில் ‘ராம ராம’ என்று ஓதுவார்கள், அவருக்கு நற்கதி கிடைக்க வேண்டுமென்று. காசியில் இன்னும் இதை நடைமுறையாகச் செயல் படுத்துகிறார்கள். காசி விஸ்வநாதரே, ராம மந்திரம் உச்சாடனம் செய்வதாக ஐதீகம் சொல்லப்படுகிறது.
இலங்கைக்குச் செல்ல குரங்குகளால் சேது பந்தனமான பாதை அமைக்கையில் குரங்குகள் எல்லாம் மலைகளையும் பெரிய பாறைகளையும் கடலில் போடும் பொழுது ஹேராம் ஹேராம் என்று சொல்லித்தான் போட்டார்களாம். இராமனே கூட இருக்கையில் அங்கு ராம நாமம்தான் துணையாகியது. அப்பாறைகள், மலைகள் எல்லாம் கடலில் மிதந்தே பாதை யாக்கியது.
‘இராமன்’ என்பது தெய்விகமான பெயர். அது ஆன்மிகமானதும், பரிசுத்தமானதும், உயர்வானதுமான பெயராகும். வசிஷ்டமகரிஷி எப்போதும் ராம நாமத்தை உச்சரிப்பதால் தான் இராமருக்கே அப்பெயரைச் சூட்டினாராம். அதே போல் இராம நாமமும் தெய்விகமும் ஆன்மிகமும் புனிதமும் உடைய பரிசுத்த தாரக மந்திரம்.
அதனால்தான் வாழ்க்கை நடைமுறையில் ‘ராம’ நாமத்தை தினம் எழுதுவதும் ஆஞ்சனேயர் பாதங்களில் சமர்ப்பிப்பதும், மாலையாகப் போடுவதும், கோடி நாமாக்கள் எழுதுவதும் இன்று நடைமுறையாக இருப்பதிலிருந்தே ராமநாம மந்திர மகிமை புரியும்.
கம்பர் தன்னுடைய இராமாயணத்தில் ஆரம்ப பலசுருதியாக
“நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாபமும் சிதைந்து தேயுமே
ஜென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம என்றிரண்டெழுத்தினால்”
என்று ஆணித்தரமாகச் சொல்லுவதால் ராம நாம மகிமை நன்குபுரியும்.
பக்த இராமதாஸ் கதை எல்லாருக்கும் தெரிந்திருக்கும். நவாப்பிடம் கடன் பட்டதால் சிறை தண்டனை அடைந்தார். ஸ்ரீராம பக்தரானதால், ‘பக்தராமதாஸர்’ என்ற பெயர் கொண்டார். ராம நாமம் தான் ஜீவன் என்று சதாசர்வகாலமும் ராம ஜெபமும், ராம பஜனும் செய்து கொண்டிருந்தார். அவர் நவாப்பிடம் ஏற்படுத்தின கடனை, ராம, லக்ஷ்மணர்கள் ராம் ரஹீமாக வந்து கடனை அடைத்து ராமதாஸைச் சிறையிலிருந்து மீட்டார்கள். இராமபிரானே மாறு வேடத்தில் வந்து அவரைக் காப்பாற்றினார் என்பது கலியுலகில் நடந்த வரலாறு. அவர் மனம் உருகி சிறையில் வைத்துப் பாடிய பாடல்
“ஓராம! நீ நாமம் ஏமிருசிரா
ஸ்ரீராம நீ நாமம் ஏமிருசிரா
எந்த ருசிரா ராம ஏமிருசிரா ராம
ஓ! ராம நீ நாமம் எந்தருசிரா!”
என்று ஆனந்தமயமாகப் பாடியிருப்பதை பூர்வி கல்யாணி ராகத்தில் ஆதி தாளத்தில் வித்வான்களால் பாடப்படும் அபூர்வ கீர்த்தனையாகும்.
அவர் அருளிய இன்னொரு பாடல்-
“அந்தா ராம மயம் ஈஜகத் அந்தா ராம மயம்” என்ற பல்லவி பந்துவராளி ராகத்தில் இன்றும் பாடப்பட்டு வருகிற ஒரு சங்கதி.
இன்னொரு பாடலால்
“ராம நாம தாரகம் ஸதா பஜரே,
ஸதா பஜரே, ஸதா ஜபோரே”
என்ற நாமாவளியும் பிரசித்தி பெற்றது. ராம நாம தாரகத்தை எப்போதும் சதாகாலமும் ஜெபியுங்கள்.
சதாசிவ பிரம்மேந்திரார் ராம நாம மகிமையை ஒரே வரியில் சொல்லுகிறார்.
“பிபரே ராமரஸம் ஹேரஸனே” என்று பல்லவியிலும் சரணத்தில்
“ஜனன மரணபய சோக விதூரம்
ஸகல சாஸ்திர நிகாமக ஸாரம்”
என்று பைரவி ராகத்தில் பாடப்படும் கீர்த்தனையால் ராம நாமத்தின் மந்திரமகிமை புரிகிறது. இதை விட ராம மந்திரத்திற்கு வேறு ஆதாரம் வேண்டுமா?
ஆதி சங்கரர் இராமனைப் பற்றிப் புகழ்ந்து சொல்லும்பொழுது, ‘ராம நாமம் போல் இனிது வேறு உளதோ? ராமர் போல் வேறு தெய்வம் இனி உளதோ?’ என்றும் கூறியிருக்கிறார்.
ஸ்வாமி வேதாந்த தேசிகர் தான் எழுதிய “ரகுவீர கத்யத்தில்” ராம நாம மகிமையையும், ராம மந்திரத்தின் திறத்தையும் இராமரின் சாகசங்கள் பற்றியும், குணாதிசயங்களைப் பற்றியும் பாடியிருப்பது வைஷ்ணவ சம்பிரதாயிகள், அதை மனப்பாடமாக சொல்லுவார்கள்.
மந்திரம் என்றாலே மகத்தான சொல்லுடையது. அக்ஷரங்களின் ஒலி அலைகளின் கூட்டுத்தான் மந்திரம். அந்த மந்திரமான சொல்லை நாம் உச்சாடனம் செய்யும்போது நம்மைச் சுற்றி ஒலி அலைகள் வளையமிட்டு கவசமாக நம்மைப் பாதுகாப்பதால், அதை மணி மந்திர ஔஷதம் என்றார்கள். நாம மந்திரம் ராம கவசமாக நம்மைச் சுற்றிக் காவல் புரிவதால் தான் இதை “ராமம் பஜே சியாமளம்” ராமா என்று பூஜித்தால் மங்களம் உண்டாகும் என்பது வாக்கு.
நம் உடலில் ஏழு குண்டலினி சக்திகள் இருப்பதாக யோக சாஸ்திரம் சொல்லுகிறது. ஆறு ஆதாரங்களிலும் ஸஹஸ்ராரம் என்பதிலும் ஆக ஏழு சக்கரங்களில் திரிந்து கொண்டு அந்தந்த ஜீவனின் ஆயுள் பிரமாணத்தைக் காட்டிக்கொண்டு வருகின்றன. அதில் ‘ரா’ மூலதாரக் குண்டலினியையும், ‘மா’ என்பது ஸஹஸ்ரார குண்டலினியையும் அதாவது முதலாவதும் கடையானதுமான குண்டலினிகளின் அக்ஷராமாவதால் ‘ராவும் மாவும்’ ஆதியும் அந்தத்தையும் குறிப்பிடுவதுபோல் அமையப்பட்டதிலிருந்து அந்த இரு எழுத்துகளின் வல்லமையும், வலிமையும் புரியும். ஆதலால் அதுவே சக்தியுள்ள மூலாதார தாரகமந்திரமாகும்.
ராம மந்திரத்தின் முக்கியமே, இந்த மந்திரத்தை எப்பொழுது வேண்டுமானாலும், நேரம் காலம் பாராது எக்காலத்திலும் எந்நேரத்திலும் மனதாரச் சொல்லக்கூடிய மகா மந்திரம் இது ஒன்றே என்பதுதான். மற்ற எல்லா மந்திரங்களுக்கும் காலநேரக் கோட்பாடுகள் அனுஷ்டானம், ஆசாரம், உபதேசம், குருமுகமாக அறிதல் ஆகியனவெல்லாம் வேண்டும். ஆனால் இந்த ராம மந்திரத்திற்கு இவை ஒன்றும் தேவையில்லை.
மனம் லயித்து, மனம் ஒன்றி, ஏக வசனமாக சொல்லக்கூடிய மகாமந்திரம் ராம மந்திரமே. இதை சாத்வீகர்களும், சகுணகுணமுடையோரும், நிர்குண உபாசிகளும் தியானம் செய்யும் மந்திரம். இரண்டெழுத்தின் ஜீவனான மந்திரம். ஜீவாத்மாவான நம் இருதயத்தில் புகுந்து பரமாத்மாவுடன் ராம மந்திரத்தால் ஐக்கியமாவது தான் தாத்பரியம்.
ராம நாமம் முக்தியைக் கொடுக்கும். மற்றதான யோகம், ஞானம், கர்மம், தியானம் ஆகிய ஒன்றும் இல்லாமல் வெறும் ‘ராம’ என்ற அக்ஷரத்தை ஆவர்த்தியாய்ச் சொன்னால் அவன் அமரருலகமும் எய்துவான் என்பது பிரமாணம்.
மகாத்மா காந்தியடிகள் எப்பொழுதும் ராம நாமம் உச்சரிப்பவர். அவர் குண்டடி பட்டதும் “ஹே ராம்” என்று சொல்லித்தான் சாய்ந்தார்.
ராம நாமம் சொல்லப்படும் இடமெல்லாம் ஆஞ்சனேயர் இருப்பார் என்பது ஐதீகம்.
வால்மீகி இராமாயணம் பலமொழிகளில் பிரசித்தி பெற்றது. தமிழில் கம்பரால் எழுதப்பட்டது ‘கம்பராமாயணம்’ என்றும் ஹிந்தியில் துளசிதாஸர் எழுதியது ‘துளசிதாஸ ராமாயணம்’ என்றும், சமஸ்க்ருத மொழியில் கவிகாளிதாசர் ‘ரகுவம்சம்’ என்றும், மலையாள மொழியில் எழுத்தச்சன் எழுதியது ‘ராமகதா’ என்றும் மராட்டிய மொழியில் ‘ஏக்நாத பர்வர்த்த ராமாயணம்’ என்றும் இருப்பவை இன்றும் மக்களால் போற்றிக் கொண்டாடப்பட்டு வருகின்றன. அதே சமயம் ‘சக்கரவர்த்தி திருமகன்’ என்று இராஜகோபாலச்சாரியார் உரை நடையாக எழுதியதும், சோவின் வான்மீகி இராமாயணம் உரை நடையாக இருப்பதும் இன்றும் மக்களிடம் காவியமாக நிலைத்து நிற்கிறது ராம நாமம் போல.
சாஸ்திரம் படித்திருக்காவிட்டாலும் வேதங்கள் தெரிந்திருக்கவிட்டாலும் மந்திர உபதேசங்கள் அறிந்திருக்காவிட்டாலும் இந்த ‘ராம’ நாமத்தைப் பாராயணம் செய்தாலே போதும். அவனுக்கு சகல சௌபாக்கியங்களும், சௌகரியங்களும் அடைந்து சந்துஷ்டியாகவும், சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் வாழ்ந்திடுவான் என்பது கண் கூடு. அந்த ராம நாமம் நமக்கு சுபிட்சம் தரும், என்பது வேதவாக்கு.
ஸ்ரீ ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம என்று நித்தமும் ஜபித்து பேரானந்தத்தில் திளைபோம்.
உங்கள் அன்பன்,
வெங்கட் அனந்தராம்.
அனைவருக்கும் எமது வணக்கம்
27 நட்சத்திரக்காரர்களிற்கும் உரிய தெய்வங்கள் :-
01. அஸ்வினி -- ஸ்ரீ சரஸ்வதி தேவி
02. பரணி -- ஸ்ரீ துர்கா தேவி (அஷ்ட புஜம்)
03. கார்த்திகை -- ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)
04. ரோகிணி -- ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்)
05. மிருகசீரிடம் -- ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)
06. திருவாதிரை -- ஸ்ரீ சிவபெருமான்
07. புனர்பூசம் -- ஸ்ரீ ராமர் (விஷ் ணு பெருமான்)
08. பூசம் -- ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்)
09. ஆயில்யம் -- ஸ்ரீ ஆதிசேஷன் (நாகம்மாள்)
10. மகம் -- ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)
11. பூரம் - ஸ்ரீ ஆண்டாள் தேவி
12. உத்திரம் - ஸ்ரீ மகாலஷ்மி தேவி
13. அத்தம் - ஸ்ரீ காயத்திரி தேவி
14. சித்திரை - ஸ்ரீ சக்கரத்தாழ்வார்
15. சுவாதி - ஸ்ரீ நரசிம்மமூர்த்தி
16. விசாகம் - ஸ்ரீ முருகப் பெருமான்.
17. அனுசம் - ஸ்ரீ லஷ்மி நாரயணர்.
18. கேட்டை - ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)
19. மூலம் - ஸ்ரீ ஆஞ்சனேயர்
20. பூராடம் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)
21. உத்திராடம் - ஸ்ரீ வினாயகப் பெருமான்.
22. திருவோணம் - ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்)
23. அவிட்டம் - ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் ( விஷ்ணுப் பெருமான்)
24. சதயம் - ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)
25. பூரட்டாதி - ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)
26. உத்திரட்டாதி - ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)
27. ரேவதி - ஸ்ரீ அரங்கநாதன்.
மேலே குறிப்பிட்டள்ளது ஒவ்வொரு நட்சத்திரகாரர்களிற்கும் அதிர்ஷ்டம் தரக் கூடிய தெய்வங்கள் ஆகும். மேலே தரப்பட்டுள்ள தெய்வங்களின் காயத்திரி மந்திரம், அஷ்டோத்திரம் ஜெபம், அவர்களின் திருக்கோவில் வழிபாடு, அவர்களின் உருவத் தியானம் ஆகியன செய்து வழிபடலாம். இருப்பினும் குல தெய்வ வழிபாடு மிக முக்கியமான வழிபாடாகும். குல தெய்வ வழிபாடிருந்தால் மட்டுமே மற்ற எந்த வழிபாடாயினும் சிறப்பைத் தரும்.
இதனைத் தவிர அவர்அவர்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய கிரகமெதுவோ அந்த கிரகத்திற்குரிய அதிதேவதையான தெய்வத்தினையும் வழிபட்டு வாழ்வில் சங்கடங்கள் நீங்கி மகிழ்ச்சியாக வாழலாம்.
நட்சத்திரங்கள் - கிரகம் - தெய்வம் :-
1. கார்த்திகை, உத்திரம், உத்திராடம் - சூரியன் - சிவன்
2. ரோகிணி, அத்தம், திருவோணம் - சந்திரன் - சக்தி
3. மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் - செவ்வாய் - முருகன்
4. திருவாதிரை, சுவாதி, சதையம் - ராகு - காளி, துரக்;கை
5. புனர்பூசம், விசாகம், பூரட்டாதி - குரு - தட்சிணாமூர்த்தி
6. பூசம், அனுசம், உத்திரட்டாதி - சனி - சாஸ்தா
7. ஆயில்யம், கேட்டை, ரேவதி - புதன் - விஷ்ணு
8. மகம், மூலம், அசுவினி - கேது - வினாயகர்
9. பரணி, பூரம், பூராடம் - சுக்கிரன் - மகாலக்மி
“பிறவிப் பெருங்கடல் நீத்துவர்
நீத்தார் இறைவனடி சேராதவர்”
என்ற திருவள்ளுவரின் வாக்குப்படி இறைவன் அடியினை சேர விரும்புபவர்கள் அதாவது இனியொரு பிறவி வேண்டாம் முத்தி – மோட்சம் அடைய வேண்டும் என நினைப்பவர்கள் முயற்சியை தொடரலாம்.
என்றும் நீங்கள் பேரானந்தத்தில் திளைக்க எமது பிரார்த்தனைகள்.
என்றும் உங்கள் சேவையில்,
உங்கள் ஜோதிட வழிக்காட்டி,
வெங்கட் அனந்தராம்.
வீட்டில் பூஜை செய்யும் போது தெரிந்து கொள்ள வேண்டிய நடைமுறைகள்!
நாம் வீட்டில் பூஜைகள் செய்யும் பொழுது பூஜா விதானம் அல்லது எந்த பூஜை செய்கிறோமோ அதற்குண்டான புத்தகத்தை வைத்துக் கொண்டு பூஜை சிறப்பாக செய்து விடுவோம்.
அன்றைய கிழமை, திதி, நட்சத்திரம் ஆகியவற்றை தினசரி கலண்டரை வைத்துக் கொண்டு சொல்லி விடுவோம்.
ஆனால், ருது என்ன வென்று சரியாகத் தெரிந்து இருக்காது.
பூஜை முடிந்ததும் பழங்கள், பக்ஷணங்கள் எல்லாம் இருக்கும்.
அவற்றின் நிவேதனப் பெயர்கள் தெரிந்து இருக்காது.
இந்த நிவேதனப் பெயர்களை தெரிந்து கொண்டு பூஜை செய்தால் இன்னும் சுலபமாக இருக்கும்.
1. கதலீபலம் – வாழைப்பழம்
2. பீஜாபூரபலம் – கொய்யாப்பழம்
3. வேத்ர பலம் – பெரப்பம் பழம்
4. பதரி பலம் – எலந்தைப் பழம்
5. கர்ஜுர பலம் – பேரிச்சம் பழம்
6. ஜம்பூ பலம் – நாவல் பழம்
7. கபித்த பலம் – விளாம் பழம்
8. த்ராஷா பலம் – திராøக்ஷ பழம்
9. சூ பழம் – மாம்பழம்
10. மாதுஸங்கபழம் – மாதுளம் பழம்
11. நாரங்கபலம் – நார்த்தம்பழம் அல்லது சாத்துக்குடி
12. பனஸ பலம் – பலாப் பழம்
13. உர்வாருகம் – வெள்ளரிக்காய்
14. ஜம்பீர பலம் – எலுமிச்சம் பழம்
15. இக்ஷúகண்டம் – கரும்பு
16. சணகம் – கடலை
17. ப்ருதுகம் – அவல்
18. ஸர்க்கரா – சர்க்கரை
19. ததி – தயிர்
20. குடோபஹாரம் – வெல்லம்
21. ஆப்பிள் – காஷ்மீர பலம்
22. அமிருதம் – தீர்த்தம்
23. நாரிகேளம் – தேங்காய்
24. ஸால்யன்னம் – சம்பா அன்னம்
25. குளா பூபம் – அதிரசம், அப்பம்
26. தத்யன்னம் – தயிர் சாதம்
27. திந்திரியன்னம் – புளியோதரை
28. ஸர்கரான்னம் – சர்க்கரை பொங்கல்
29. மாஷா பூபம் – வடை
30. ரஸகண்டம் – கற்கண்டு
31. மோதகம் – கொழுக்கட்டை
32. திலான்னம் – எள்ளு சாதம்
33. ஆஜ்யோபகாரம் – நெய்
34. லட்டூகம் – லட்டு
35. சித்ரான்னம் – பலவகை கலந்த சாதம்
36. நாரிகேளகண்டத்வயம் – இரண்டாக உடைத்த தேங்காய்
37. க்ருதகுள பாயஸம் – வெல்லம் போட்ட பாயஸம்
38. கோக்ஷீரம் – பசும் பால்
ருதுக்கள்
சித்திரை, வைகாசி – வஸந்த ருது
ஆனி, ஆடி – க்ரீஷ்ம ருது
ஆவணி, புரட்டாசி – வர்ஷ ருது
ஐப்பசி, கார்த்திகை – சரத் ருது
மார்கழி, தை – ஹேமந்த ருது
மாசி, பங்குனி – சிசிர ருது
கிழமைகளைச் சொல்லும் முறை
ஞாயிறு – பானு வாஸர
திங்கள் – இந்து வாஸர
செவ்வாய் – பவும வாஸர
புதன் – சவும்ய வாஸர
வியாழன் – குரு வாஸர
வெள்ளி – ப்ருகு வாஸர
சனி – ஸ்திர வாஸர
பூஜைகள் செய்யும் பொழுது, மாதங்களைச் சொல்ல வேண்டிய முறை
சித்திரை – மேஷ மாஸே
வைகாசி – ரிஷப மாஸே
ஆனி – மிதுன மாஸே
ஆடி – கடக மாஸே
ஆவணி – ஸிம்ம மாஸே
புரட்டாசி – கன்யா மாஸே
ஐப்பசி – துலா மாஸே
கார்த்திகை – வ்ருச்சிக மாஸே
மார்கழி – தனுர் மாஸே
தை – மகர மாஸே
மாசி – கும்ப மாஸே
பங்குனி – மீன மாஸே.
அன்பர்களே,
அரசமரத்தின் விதையானது நமது பார்வைக்கு புலப்படாது . அது மிகவும் சிறியது. ஆனால் அதுவே ஒரு கட்டிடத்தில் உள்ள இடுக்கில் விழுந்தால் அது வேர்பிடித்து சின்னசெடியாகி, மரமாகிக் கட்டிடத்தையே பெயர்த்துத் தள்ளுகிறது அப்படித்தான் நல்லவர் மனதையும் மிக மிக எளிதாக தீய எண்ணங்கள் மாற்றி அமைக்கும்.
ஆகவே நாம் நமது மனதை கீறல்கள்/சஞ்சலங்கள் இன்றி அமைத்து கொள்வோமாக.வாழ்க வளமுடன்.வாழ்க பேரானந்த வாழ்வு.
அன்பன் ,
வெங்கட் அனந்தராம்.
தெய்வத்தின் குரல் (நான்காம் பாகம்) 4
மங்களாரம்பம் - பெரிய இடத்துப் பிள்ளை
திருமால் செய்த கோணங்கி
இப்படி விவாஹ ஸம்பந்தமில்லாவிட்டாலும், பிள்ளையாருக்கு மாமா மஹாவிஷ்ணுவிடம் ரொம்ப நெருக்கமுண்டு. குழந்தைகளுக்குக் கோணங்கி காட்டினால் போதும், அதனிடம் எதையும் ஸாதித்துக்கொண்டு விடலாமென்றேன் அல்லவா? இப்படி மாமாக்காரரான மஹாவிஷ்ணு செய்த கோணங்கியாட்டம்தான் இப்போது விக்னேச்வர வழி பாட்டில் ரொம்பவும் முக்யமாயிருக்கிறது. பிள்ளையாரென்றால் உடனே தோப்புக்கரணத்தைத்தான் நினைத்துக்கொள்கிறோம். மற்ற ஸ்வாமிகள் மாதிரி இவர் ரொம்பச்ரமம் தருகிற ஸ்வாமி இல்லை என்று சொன்னேன். பெருமாளென்றால் அங்க ப்ரதஷ்ணம்; 'முழங்கால் முறிச்சான்' மலை ஏறிப்போகணும்; அலகு செடில் குத்திக் கொள்வது என்றெல்லாம் கூட உண்டு. ஈஸிவரனுக்கோ ஒரே பசியும் பட்டினியுமாய் உபவாஸமிருக்க வேண்டும். இப்படியெல்லாமில்லாமல், ஸ்வல்ப, ச்ரமமே தருகிறவர் பிள்ளையார்தான். அதுவுங்கூட வேடிக்கையாக, குழந்தை விளையாட்டு மாதிரி, அல்லது குழந்தைக்கு விளையாட்டுக் காட்டுகிற மாதிரித்தானிருக்கும். நெற்றியில் குட்டிக் கொள்வது, தோப்புக் கரணம் போடுவது இரண்டையுந்தான் சொல்கிறேன். ஒருத்தர் தோப்புக்கரணம் போட்டால் குழந்தையே முதற்கொண்டு அதை வேடிக்கையாகப் பார்த்துக் கொண்டு, தன் ஸ்வபாவப்படி தானும் அப்படி 'இமிடேட்' பண்ணும். இந்தத் தோப்புக்கரணத்தை ஆதியில் உண்டாக்கியவர் மஹாவிஷ்ணுதான். அவர் ஒரு ஸமயம் ஸஹோதரியைப் பார்ப்பதற்காகவும், தமக்கு ரொம்பவும் ஆபத்மான பரமேச்வரனோடு ஸல்லாபிப்பதற்காகவும், மருமான் கணேசரைக் கொஞ்சி விளையாடுவதற்காகவும் கைலாஸத்துக்கு வந்திருந்தார். அப்போது தம்முடைய சக்கரத்தைச் சுட்டிக் குழந்தைக்கு வேடிக்கை காட்டினார். உடனே குழந்தை தும்பிக்கையை நீட்டிச் சக்கரத்தைப் பிடிங்கிக்கொண்டு லபக்கென்று வாய்க்குள் போட்டு நன்றாக அடக்கிக் கொண்டுவிட்டது. மஹாவிஷ்ணு நயமாகவும் பயமாகவும் எத்தனை பண்ணியும் அது சக்கரத்தை வெளியே போடமாட்டேனென்று அடம் பண்ணி விளையாடிற்று. அப்போது தான் மஹாவிஷ்ணு யுக்தி பண்ணி, இப்படிக் காதைப் பிடித்துக் கொண்டு தோப்புக் கரணம் போட்டார். அதைப் பார்த்ததும், எப்போதுமே சிரித்த முகமாயிருக்கும். 'ப்ரஸன்னவதன'க் குழந்தை விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிக்கிறது. சிரிக்கிறபோது வாயில் அடக்கிக் கொண்ட சக்ரமும் குபுக்கென்று வெளியிலே வந்து விழந்தது. சடக்கென்று அதை மஹாவிஷ்ணு எடுத்து வைத்துக் கொண்டுவிட்டார்.
மஹாவிஷ்ணு கைகளால் காதைப் பிடித்துக் கொண்டது ஸம்ஸ்கிருதத்தில் "தோர்ப்பி:" என்றால் "கைகளால்." "கர்ணம்" என்பது காது என்று தெர்ந்ததே. கையால் காதைப் பிடித்துக் கொள்ளும் 'தோர்பி like emoticon கர்ண'மே தோப்பிக்கரணம், என்றெல்லாம் ஆகிவிட்டது. குட்டிக்கரணம் என்கிற மாதிரி இங்கே கரணம் இல்லை கர்ணம் என்று சொல்லவேண்டும்
முதலில் யாரோ மனுஷாள் இதை ஆரம்பிக்காமல் மஹாவிஷ்ணுவே ஆரம்பித்தார் என்பதற்கும் 'தோர்பி like emoticonகர்ணம்' என்ற வார்த்தையிலேயே 'எவிடென்ஸ்' (சான்று) இருக்கிறது. அதைப் புரிய வைப்பதற்கு கொஞ்சம் ஸ்ம்ஸ்க்ருத இலக்கணம் சொல்லித் தரணும்.
தமிழ், இங்கிலீஷ் முதலான பாஷைகளில் ஒருமை, பன்மை, ஸிங்குலர்-ப்ளூரல் என்று இரண்டுதான் இருக்கின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட எல்லாம் பன்மை, ப்ளூரல் என்று வைத்துவிடுகிறோம். ஸ்ம்ஸ்க்ருதத்தில் மட்டும் ஏகவசனம், த்வி வசனம், பஹுவசனம் என்று மூன்று இருக்கின்றன. ஏகவசனம் என்பது ஒருமை. த்விவசனம் என்பது தமிழிலும் இங்கிலீஷிலும் இல்லாதது. அதை 'இருமை' என்று வேண்டுமானால் சொல்லலாம். இரண்டு பேர் அல்லது இரண்டு வஸ்துவை மட்டும் அது குறிக்கும். இரண்டுக்கு மேலே போகிற எல்லாம் பஹு வசனம். சிவம்-சக்தி, பரமாத்மா-ஜீவாத்மா, பகவான்-பக்தன், ஸதி-பதி, குரு-சிஷ்யன் என்றிப்படியும், ஒரு மநுஷ்ய ஜீவனை எடுத்துக்கொண்டால் அவனுக்கு இரண்டு கண், இரண்டு காது, இரண்டு கை, இரண்டு கால் என்றெல்லாமும் இருப்பதாலோ என்னவோ இரண்டு என்பதற்குத் தனி ஸ்தானம் தந்து 'த்வி வசனம்' என்ற ஒன்றை வைத்திருக்கிறது.
மநுஷ்யர்களால் தோப்புக்கரணம் ஆரம்பிக்கப்பட்டிருந்தால், 'கைகளால் காதைப் பிடிப்பது' என்பதில் 'கைகளால்'என்பதற்கு த்வி வசன வார்த்தைதான் இருக்கவேண்டும். ஏனென்றால் மநுஷ்யனுக்கு இருப்பது இரண்டு கைதானே? 'தோஸ்' என்பது கை. முதல் வேற்றுமை ஒருமையில் ஒரு கையை 'தோ' என வேண்டும். 'கைகளால் ' என்பது மூன்றாம் வேற்றுமை 'ஒரு கையால்'என்பதற்கு தோஷா என்று சொல்லவேண்டும்.'இரண்டு கைகளால்' என்பதற்க்கு தோர்ப்யாம் . மநுஷ்யர்களான நாம் 'இரண்டு கைகளால் போடும் தோப்புக்கரணத்தை 'தோர்ப்யாம் கர்ணம்' என்று தான் சொல்ல வேண்டும். இது பேச்சு வழக்கில் திரிந்தால்கூட 'தோப்பாங்கரணம்' என்றுதான் ஆகியிருக்காது. "தோர்பி:" என்பதோ இரண்டுக்கும் மேற்பட்ட பல கைகளைக் குறிக்கும் பஹுவசனமாயிருக்கிறது. தோஷா ஒரு கையால்; தோர்ப்யாம் - இரண்டு கைகளால்; தோர்பி like emoticon -இரண்டு மேற்பட்ட கைகளால் விஷ்ணுவுக்கு எத்தனை கை? நாலு கை. இரண்டுக்கு மேற்பட்ட நாலு கைகளால் அவர் காதைப் பிடித்துக் கொண்டதால் தான் தெளிவாக பஹுவசனத்தில் "தோர்பி like emoticon - என்று சொல்லி, அது 'தோப்பி' என்று ஆகிவிட்டிருக்கிறது.
மாமா-மருமான் உறவைச் சொல்ல வந்தேன். பிள்ளையாருக்குப் பிடித்த, எல்லாப் பிள்ளைகளுக்குமே பிடித்த, தோப்பிக்கரணத்தை அவரது மாமா மஹாவிஷ்ணுதான் 'இனாகுரேட்' பண்ணியிருக்கிறார்!
"சுக்லாம் பரதரம்"
"சுக்லாம்பரதரம்" ச்லோகம் எதற்கும் ஆரம்பத்தில் சொல்கிறோமே, அதிலே ஒரு வேடிக்கை! என்ன வென்றால், அதில் பிள்ளையாருடைய பெயர் எதுவுமே வரவில்லை! கணபதி, கணேசர், விநாயகர், விக்நேச்வரர் என்ற மாதரி அவருக்கே ஏற்பட்ட பெயரோ பெற்றோரைவைத்து ஏற்பட்ட சிவாத்மஜன், கௌரீஸுதன் என்ற மாதிரிப் பெயரோ, அவருடைய வாஹனம், ஆயுதம், இஷ்டமான வஸ்து ஆகியவைகளை வைத்து ஏற்பட்ட மூஷிக வாஹனர், பாசஹஸ்தர், மோதக ப்ரியர் முதலான ஏதாவதொரு பெயரோ, அவரது ரூப லஷணங்களைக் குறிக்கிற பெயர்களான கஜமுகர், ஏகதந்தர், லம்போதரர் (தொங்கும் தொந்திக்காரர்) முதலானதுகளில் ஏதாவதொன்றோ, அல்லது அவரது லீலைகளை வைத்து ஏற்பட்ட ஏராளமான பெயர்களில் எது ஒன்றுமோ ' சுக்லாம் பரதர' ச்லோகத்தில் வரவில்லை.
சொல்லிப்பாருங்கள்.
சுக்லாம்பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம் !
ப்ரஸந்ந வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோபசாந்சயே!!
"சுக்லாம்பரதர": வெள்ளை வஸ்த்திரம் கட்டிக் கொண்டிருப்பவர். ஸரஸ்வதியும் ஈச்வரனும்கூடத்தான் வெள்ளை கட்டிக்கொள்வார்கள். வித்யாஸமாக மஞ்சள், சிவப்பு கட்டிக்கொள்கிற ஸ்வாமிகளைப் பீதாம்பரதாரி, ரக்தாம்பரதாரி என்றெல்லாம் சொன்னால் அது அவர்களைத்தான் ஸ்பெஷலாகக் குறிக்கிறது என்பதுபோல, 'சுக்லாம்பரதரர்' என்பது பிள்ளையாரை மாத்திரம் குறிப்பிட்டுவிடவில்லை.
அடுத்ததாக, "விஷ்ணு." இதற்காகத்தான் நான் இந்த ச்லோகத்தைச் சொல்லவந்தேன். மாமா பேரையே மருமகனுக்குச் சொல்லியிருக்கிறது. அத்தனை அந்நியோந்நியம்! 'விஷ்ணு' என்றால் எல்லா இடத்திலேயும் பரவியிருப்வர், ஸர்வ வ்யாபி என்று அர்த்தம். பிள்ளையார் எங்கேயும் இருக்கிறாரென்பதால் 'விஷ்ணு' என்று சொல்லியிருந்தாலும்; அந்த வார்த்தையைக் கேட்டவுடனேயே நமக்கு அவருடைய மாமா நினைவுதானே வருகிறது?
"சசிவர்ண" நிலா மாதிரி நிறமுடையவர். ஈச்வரனும், ஸரஸ்வதியும்கூடத்தான் அப்படிப் பால்நிலா மாதிரி இருப்பவர்கள். "சதுர்புஜ": நாலு கை உள்ளவர். அநேகமாக எல்லா ஸ்வாமிக்குமே நாலு கைதானிருக்கிறது. அதனால் இதிலும் இவருக்கென்று ஸ்பெஷலாக அடையாளம் கிடைத்துவிடவில்லை.
"ப்ரஸந்ந வதந": நல்ல மலர்ந்த முகமுள்ளவர் பின்னே, எந்த ஸ்வாமியாவது அழுமூஞ்சியாக இருக்குமா என்ன? காளி, வீரபத்ரர், நரஸிம்ஹ மூர்த்தி மாதிரி உக்ரமாக இருக்கப்பட்ட சில ஸ்வாமிகளைத் தவிர மற்ற எல்லா ஸ்வாமியும் பக்தர்களிடம் அநுக்ரஹத்தோடு ஆனந்தம் நிறைந்த முகத்தோடு இருப்பதைதான் இத்தனை ஆயிரம் விக்ரஹங்களிலும் பார்க்கிறோம். அவர்களை எல்லம்விட இன்னம் ஆனந்தம் சொட்டிக் கொண்டிருக்கும் படியாகப் பரந்த, விசாலமான ஆனைமுகத்தோடு இவர் இருக்கிறார் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
இப்படி சுக்லாம்பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம், ப்ரஸந்ந வதநம்
என்று வருகின்ற ஜந்து வார்த்தைகளில் எதுவுமே பிள்ளையாரொருவரை மட்டுந்தான் குறிக்கிறது என்று சொல்வதற்கு இடமில்லாமலிருக்கிறது. (இந்த ஜந்து வார்த்தைகளில் ஒவ்வொன்றுக்கும் ஒரு குட்டாக ஜந்து தரம் நெற்றிப் பொட்டில் குட்டிக்கொள்ள வேண்டும்)
அப்புறம், 'த்யாயேத்' என்பதற்கு 'த்யானிக்க வேண்டும்' என்று அர்த்தம்.
எதற்காக த்யானிக்க வேண்டும்? "ஸர்வ விக்ந உப சாந்தயே"- எல்லா விக்னங்களும், தடைகளும் இடையூறுகளும் அடங்கி மறைந்து போவதற்காகவே, இங்கே தான், ஒரு நாமாவாகசி சொல்லாவிடிடாலும், பிள்ளையாருக்கென்றே ஏற்பட்ட விசேஷ லக்ஷணம் தெரிகிறது. எடுத்த கார்யம் விக்னமில்லாமல் நடக்க வேண்டுமென்றால் அதற்கென்று பிரார்த்திக்கப்பட வேண்டிய ஸ்வாமி பிள்ளையார்தான். அதனால்தான் எந்தக் கார்யத்திலும் ஆரம்பிக்கிறபோதே அவருக்குப் பூஜை பண்ணிவிடுவது; இந்த ஒரு ச்லோகமாவது சொல்லி நெற்றியில் குட்டிக் கொண்டுவிடுவது.
ச்லோகம் சொல்லிக் கொள்ளக்கூடிய வயஸுக்கு முந்தியே ஒரு சின்னக் குழந்தையிடம்கூட, 'அப்பா! பிள்ளையாரை நினைச்சுக்கோ! அப்போதான் எந்தக் கஷ்டமும் வராமலிருக்கும்' என்று சொல்லிக் கொடுத்துவிடுவார்கள். அதனால், ச்லோகம் கற்றுக் கொள்கிற வயஸு வந்தபோது, இப்படி 'ஸர்வ விக்நோபசாந்தயே' என்று சொல்லிக் கொடுத்துவிட்டாலே போதும், 'இடைஞ்சல் வராமலிருப்பதற்காக இந்த ஸ்வாமிக்கு ஸ்தோத்ரம் சொல்லணுமா? அப்படியானல் அவர் பிள்ளையாரகத் தானிருப்பார்' என்று அந்தக் குழந்தைகூடப் புரிந்துகொண்டுவிடும்.
'விஷ்ணு' என்றே இந்த ச்லோகத்தில் இருப்பதிலிருந்து பிள்ளையாருடைய உறவு முறைகளில் மாமாவின் அருமை தெரிகிறது. அதை வைத்துத்தான், சற்றுமுன் சொன்ன ச்லோகத்தில் "ஸ்ரீ காந்தோ மாதுலோ யஸ்ய"-எவருக்கு மாமா லக்ஷ்மிபதியான மஹாவிஷ்ணுவோ- என்று ஆரம்பிக்கிறது. (மலையாளத்தில் 'மருமக்கத்தாயம்' என்று மருமான் வழியாக ஸொத்து போகும் முறை ஞாபகம் வருகிறது.)
தெய்வத்தின் குரல் (நான்காம் பாகம்) 5
மங்களாரம்பம் - பெரிய இடத்துப் பிள்ளை
பெற்றோர் பெருமை
மாமாவுக்கு முதல் இடம் கொடுத்துச் சொல்லிவிட்டு, அவருடைய ஸஹோதரியாக, இவருடைய தாயாக இருக்கப்பட்ட அம்பாளைச் சொல்லியிருக்கிறது.
ஜநநீ ஸர்வமங்களா (பிள்ளையாருடைய ) அம்மா, ஜனனி, யார்? ஸர்வ மங்களா. ரூபம், குணம், கார்யம் முதலான ஸர்வமும் பரம மங்களமாக இருக்கப்பட்ட பராசக்திதான் இவருக்கு அம்மா, அம்பாளை பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கக்கூடிய ச்லோகம் அவளை ஸர்வமங்களா என்று சொல்லித்தான் ஆரம்பிக்கிறது.
ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே!
சரண்யே த்ர்யம்பகே கௌரி நாராயணி நமோஸ்து தே!!
மஹாவிஷ்ணுவின் அநேகம் பெயர்களில் ஸ்ரீகாந்தன் என்றதில் 'ஸ்ரீ'
என்பதால் ஸகல ஸெளபாக்கியங்களையும் சொன்னதற்கேற்ப அம்பாளின் பல பெயர்களில் ஸர்வ மங்களா என்று சொல்லிவிட்டு, அப்புறம் அப்பாவைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறது. அன்னைக்குப் பிறகே பிதா என்ற நியாயப்படி, அம்பாளை முதலில் சொன்னபின் "ஜநக: சங்கரோ தேவ:"
என்று இவருடைய தகப்பனார் யாரென்றால் பரமசிவன் என்பதாகச் சொல்லியிருக்கிறது.
பரமேச்வரனுக்கு எத்தனையோ பெயர்களிருந்தும், பரம மங்களமாக 'ஸ்ரீகாந்தன்', ஸர்வமங்களா' என்ற பெயர்களைச் சொன்னாற்போல, இங்கேயும் 'சங்கரன்' என்று சொல்லியிருக்கிறது. 'சங்கர' என்றால் நல்லதையே செய்கிறவர், பரம ஸுகத்தை உண்டாக்குபவர் என்று அர்த்தம். ஸ்ரீ, மங்களம், ஸுகம் எல்லாம் தருபவர் விக்நேச்வரர் என்று காண்பிக்கும் வகையில் அவருக்குள்ள மாமா, அம்மா, அப்பாவின் ' பெரிய இடத்து' ஸம்பந்தத்தைச் சொல்வதாக ச்லோகம் இருக்கிறது.
ஸ்ரீ காந்தோ மாதுலோ யஸ்ய ஜநநீ ஸர்வமங்களா !
ஜமக: சங்கரோ தேவ: தம் வந்தே குஞ்ஜராநநம் !!
"தம் குஞ்ஜராநநம வந்தே" - இப்படிப்பட்ட அந்த யானை முகனை நமஸ்கரிக்கிறேன்.


தெய்வத்தின் குரல்
'எல்லோரும் ஸெளகரியமான தொழில் பண்ணுகிறார்களே!ஏன் நாம் செய்யக் கூடாது?என்று பிராம்மணன் நினைக்கக் கூடாது. தன்னுடைய கடமையை நன்றாகச் செய்துவிட்டுப் பிறகுதான் ஜீவனோபாயத்தை நினைக்க வேண்டும். முன்பு இவன் பிராம்மண தர்மங்களைச் செய்தாலே போதுமென்று ராஜாவும் ஸமூஹமும் இவனுக்கு மானியம், ஸம்பாவனை செய்து வாழ வசதி தந்தார்கள். இப்போது நிலைமை மாறிவிட்டதால், பணத்துக்கும் கொஞ்சம் பிரயத்தனப்பட வேண்டியதுதான். ஆனால் நிரம்பப் பணத்தை ஸம்பாதிக்க வேண்டுமென்று ஆசைப்படக்கூடாது. இதற்காக அநாசார வழிகளில் பிரவேசிக்கக் கூடாது. பிராம்மணர்களுக்கு தரித்திர நிலை வேண்டியதுதான். இன்பங்களைத் தேடாமல் காயக் காயக் கிடந்தால்தான் இவனுக்கு ஞானப் பிரகாசம் உண்டாகும். அதனால் லோகம் வாழும். கண்ட தேசங்களுக்குச் சென்று ஆசார அநுஷ்டானங்களை விட்டுவிட்டு ஸம்பாதிக்கிற ஐச்வர்யம் இவனுக்கு வேண்டாம். அதுபடி ஸம்பாதிக்காவிட்டால் ஒன்றும் முடியாது என்பது இல்லை. லோகத்தில் மந்திர சக்தியைக் காப்பாற்றிக் கொண்டு தன்னுடைய தர்மத்தை அநுஷ்டிப்பது முதல் கடமை. ஸம்பாதிப்பது secondary (இரண்டாவது) தான்.
மந்திர சக்தி என்ற அக்கினியை இவன் காப்பாற்றிக் கொண்டு வந்தால் அது எல்லோருக்கும் க்ஷேமத்தை உண்டாக்கும். லோகத்தில் எவருக்குக் கஷ்டம் வந்தாலும் அதை நிவர்த்திக்கும் சக்தி பிராம்மணனுக்கு மந்திர சக்தியின் மூலம் இருக்க வேண்டும். யாராவது கஷ்ட காலத்தில் வந்து பிரார்த்தித்தால், "பண்ணுவதைத்தான் நானும் பண்ணுகிறேன், உனக்கு இருக்கிற சக்திதான் எனக்கும் இருக்கிறது"என்று ஒரு பிராம்மணன் சொன்னால் அவனுடைய ஜன்மா வீண்.
மந்திர சக்தியாகிய அக்கினி இப்பொழுது பெரும்பாலும் அணைந்திருக்கிறது. பிராம்மண தேஹம் விகாரம் ஆகிவிட்டது. அதில் அசுத்தமான பதார்த்தங்கள் சேர்க்கப் படுகின்றன. ஆனால், ஒரு பொறி மட்டும் அணையாமல் இருக்கிறது. அதை விருத்தி பண்ணவேண்டும். அப்படிச் செய்தால் எப்பொழுதாவது பற்றிக்கொள்ளும். அந்த நெருப்புப் பொறிதான் காயத்ரீ. அது பரம்பரையாக வந்திருக்கிறது.
தெய்வத்தின் குரல் (நான்காம் பாகம்) 6
மங்களாரம்பம் - பெரிய இடத்துப் பிள்ளை
முருகனும் மூத்தோனும்
தாத்தா, அப்பா, அம்மா, மாமா எல்லாரும் ரொம்பவும் பெரியவர்களாக இருக்கிறார்கள்.அது மட்டுமில்லை. கூடப் பிறந்தவரும் ரொம்ப மஹிமையுள்ளவர். கூடப் பிறந்தவரென்றால் இவருக்கு அண்ணா கிடையாது. இவர்தான் "மூத்த பிள்ளையார் மும்மணிக்கோவை" என்றே இவர்மேல் ஒரு ஸ்தோத்ரம் இருக்கிறது. ப்ரபஞ்சத்துக்கே முதல் குழந்தை அவர்."ஜயேஷ்ட ராஜா" என்பது வேதமே அவருக்குக் கொடுத்திருக்கிற பெயர். கணபதிதான் எல்லாருக்கும் அண்ணா. அவருக்குத் தம்பிதான் உண்டு.
தமையன் பெரிய ஆஸாமியாயிருந்தால் அவன் பெயரை வைத்துக்கொண்டே தம்பி தடபுடல் பண்னுவதுண்டு இப்படியே தம்பிக்காரன் பிரமுகனாயிருந்தாலும், தனக்காக யோக்யதையில்லாத அண்ணன்காரன் அதைக்காட்டி அதிகாரம் பண்ணவதுண்டு. இங்கேயோ ஈச்வர புத்ரர்கள் இரண்டு பேருமே சக்தி, ஸாமர்த்யங்களிலும் அநுக்ரஹத்திலும் ரொம்பவும் உயர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதனால் பிள்ளையாருக்கு உறவுகளைச் சொல்லிப் பெருமை காட்டும்போது தம்பியையும் சொல்ல வேண்டியிருக்கிறது.
பிள்ளையாருக்கு விசேஷமாகப் பதினாறு பெயர்கள் உண்டு. ஷோடச நாமாக்கள் என்று சொல்வார்கள். (ஷோடசம் என்றால் பதினாறு) அஷ்டோத்தர (சத) ம் சொல்லிப் பூஜை பண்ண முடியாவிட்டாலும் இந்தப் பதினாறு நாமாக்களையாவது சொல்ல வேண்டும்.
ஸுமுகச்ச ஏகதந்தச்ச கபிலோ கஜகர்மக :!
ஸம்போதரச்ச விகடோ விக்நராஜோ விநாயக:!!
தூமகேதுர் கணாத்யஷோ பாலசந்த்ரோ கஜாநந:!
வக்ரதுண்ட: சூர்ப்பகர்ணோ ஹேரம்ப: ஸகந்தபூர்வஜ:!!
கடைசிப் பெயர் 'ஸ்கந்தபூர்வஜர்'-அதாவது 'ஸ்கந்தனுக்கு முன்னாடிப் பிறந்தவர்.' தம்பியை வைத்துத் தமையனாருக்குப் பெருமை கொடுக்கும் பெயர்! இப்படி இவருடைய பல உறவுக்காரர்களைப் பார்த்தாலும் இவர் ரொம்ப பெரிய இடத்துப் பிள்ளை என்று தெரியும். அதனால் அந்தப் பிள்ளையை நாம் மனங் குளிர்ந்திருக்கும் படியாகப் பண்ணவேண்டும். அதற்குக் கோபம் உண்டாகும்படியாக எதுவும் பண்ணாமல் ஜாக்கிரதையாயிருக்கவேண்டும். மூவுலகத்தின் மூத்த குழந்தையுடைய ப்ரீதியை நாம் முக்யமாக ஸம்பாதித்துவிட வேண்டும். நல்ல மனஸ், அருள் உள்ளம், இரக்க குணம் உள்ள அவர் எளிதிலே த்ருப்தி கொண்டுவிடுவார். எப்போதுமே ஆனந்தமாயிருக்கும் அவரை நாமும் கொஞ்சம் குஷிப்படுத்தி விட்டால், அவருடைய மாதா பிதாக்களான பார்வதீ பரமேச்வரர்களின் மனஸையும் குளிரப்பண்ணி அவர்களிடமிருந்து ஸகல நலன்களையும் பெற்றுவிடலாம்.
பிற தெய்வங்களும் போற்றும் பிள்ளையார்
மரியாதைக்குரிய குழந்தை
பெரிய இடத்துப் பிள்ளை என்பதாலேயே, 'நாம் நமக்கென்று ஒரு யோக்யதையும் ஸம்பாதிக்கொள்ள வேண்டியதில்லை. நம்முடைய பெரிய ஸம்பந்தத்தைக் காட்டியே ஊரை ஆட்டி வைத்துக்கொண்டிருக்கலாம்' என்று இருப்பவர்கள் உண்டு. அநேகம் பெரிய மநுஷ்யரகத்துப் பசங்கள் தறுதலைகளாகவோ, அசட்டுப் பிசட்டென்றோ இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் இந்தப் பெரிய இடங்களுக்கெல்லாம் உச்சியிலுள்ள மஹா பெரிய இடத்துப் பிள்ளை, 'உச்சிப்பிள்ளையார்' என்கிறோமே, அவர் எப்படியிருக்கிறார்? தேஹபலமா, புத்திக் கூர்மையா, கார்ய சக்தியா, அன்புள்ளமா எல்லாவற்றிலும் தமக்கு மேல் யாருமில்லை என்று இருக்கிறார். பெரிய இடத்துப் பிள்ளை என்பதால் மாத்திரம் அவருக்குப் பெருமையில்லை. அவருக்காகவே அவருக்குப் பெருமை என்பது "பிள்ளை" க்கு "யார்" போட்டு அவரைப் "பிள்ளையார்" என்று மிகவும் மரியாதையாகச் சொல்வதிலிருந்தே தெரியும்.
பொதுவாகச் தாய், தகப்பன், பாட்டன், பாட்டி, தமையன், தமக்கை ஆகிய பெரியவர்களைத்தான் மரியாதையாகத் தாயார், தகப்பனார், பாட்டனார், பாட்டியார், தமையனார், தமக்கையார் என்றெல்லாம் சொல்வது வழக்கம். பிள்ளைக்கு அப்படி மரியாதை விகுதி சேர்த்துச் சொல்கிற வழக்கம் எங்கேயும் கிடையாது. இதற்கு மாறுதலாக இவர் ஒருவர் விஷயத்தில் மட்டும் "பிள்ளை" என்காமல் "பிள்ளையார்" என்றே சொல்கிறோம்
முழுமுதற் கடவுளாக
பிள்ளையார் ப்ரிதியை நாம் பெற்றுவிட்டால் அவரிடம் மிகவும்
அன்புகொண்ட பார்வதி பரமேச்வரர்களின். அநுக்ரஹத்தைப் பெற்று விடலாமென்றேன். நாம் பொதுவாக ஈச்வரனையும் அம்பாளையும் முக்யமாகக் கொண்டு வழிபடுபவர்களாதலால், அவர்களுடைய செல்லப் பிள்ளையை நாம் ஸந்தோஷப்படுத்துவதாலேயே அவர்களிடமிருந்து எல்லா அநுக்ரஹமும் பெற்விடலாமென்பதற்காச் சொன்னேன். இதனால் அநுக்ரஹ சக்தி அவர்களுக்குத்தான் உண்டு, பிள்ளையாருக்குக் கிடையாது என்றதாக ஆகாது. அப்பாவும் அம்மாவுந்தான் அருள் செய்யவேண்டும் என்றில்லாமல் அவரே எதையும் அருள் வல்லவர்தான்.
ஈச்வரனுக்கும் அம்பாளுக்கும் புத்ரர் என்பதற்காக இல்லாமல், அவரே முழுமுதற் கடவுள் என்று உபாஸிக்கிறவர்கள் இம்மை மறுமை நலன்கள் எல்லாவற்றையும் அவரே அநுக்ரஹிப்பாரென்று கொண்டிருக்கிறார்கள். கணபதியே பரதெய்வம் என்று உபாஸிக்கிற இவர்களுக்கு 'காணபத்யர்கள்' என்று பெயர். தங்களுடைய உபாஸனா மூர்த்தியின் உத்கர்ஷம் (உயர்வு) பற்றி அவர்கள் பிற உபாஸகர்களிடம் சொல்லும் ஒன்றை எவரும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். "சிவனையோ, அம்பாளையோ, முருகனையோ, விஷ்ணுவையோ பரதெய்வமாகப் பூஜிக்கிற நீங்களும் உங்கள் ஸ்வாமியைப் பூஜை பண்ண ஆரம்பிக்கும்போது முதலில் 'சுக்கலாம்பரதரம்' குட்டிக் கொணடு, மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து
எங்கள் ஸ்வாமியை வேண்டிக் கொள்ளத்தானே வேண்டியிருக்கிறது? பிள்ளையாரையே பரமாத்மாவாகப் பூஜை பண்ணும் நாங்கள் உங்கள் ஸ்வாமிகளில் எவரையும் இப்படி வேண்டிக் கொள்வதில்லையே!" என்று அவர்கள் சொல்வார்கள்.
விஷ்வக்ஸேனர், தும்பிக்கையாழ்வார் என்ற பெயர்களில் வைஷ்ணவர்கள் முதல் பூஜை செய்வதும் விக்நேச்வரரின் ஒரு அவஸரத்துக்குத்தான் (கோலத்துக்குத்தான்) என்று சொல்லலாம்.தாமே அக்ர (முதல்) பூஜை பெறுகிற உயர்வோடு விளங்குபவர் பிள்ளையார். "இவரை பற்றிய ச்லோகங்களில் ஈச்வரன், அம்பாள், விஷ்ணு, முருகன் முதலியவர்களைப்பற்றி வருவதால், அந்த ஸ்வாமிகளாலேயே இவருக்குப் பெருமை என்று நினைத்தால் அது ஸரியே இல்லை.அந்த ஸ்வாமிகள் எல்லாருங்கூட ஏதாவது ஒரு ஸந்தர்பத்தில் இவர் தயவை நாடித்தான் கார்ய ஸித்தி அடைந்திருக்கிறார்கள்" என்று கணபதி உபாஸகர்கள் புராணங்களைக் காட்டுவார்கள்.
தெய்வங்களில் உசத்தி தாழ்த்தி இல்லை; இல்லவே இல்லைதான். ஆனாலும் ஒரே பரமாத்மா லீலானந்தத்துக்காகவும், ஜனங்களின் விதவிதமான மனப்போக்குகளில் ஒவ்வொனறுக்கும் பிடித்த மாதிரியும், பல ரூபங்களில் வருகிறபோது, அவரவருக்கும் தங்கள் மூர்த்தியும் பக்தி ஒருமுகப்படுவதற்காக ஒவ்வொரு மூர்த்தியும் மற்றவற்றைச் சில ஸந்தர்பங்களில் ஜயித்ததாகப் புராணங்களில் பார்க்கிறோம். ஒவ்வொரு மூர்த்தியும் இப்படி மற்றவற்றை ஜயித்தது என்பதாலேயே ஒவ்வொன்றும் மற்றவற்றிடம் தோற்றும்தான் இருக்க வேண்டுமென்றாகிறதல்லவா? இப்படி ஒவ்வொரு தெய்வமும் சில ஸந்தர்பத்தில் ஜயித்து, சில ஸந்தர்பத்தில் தோற்றுப் போவதில் ஜயித்தவைகளை மட்டுமே அந்தந்த தெய்வத்தின் பக்தர்களும் எடுத்துக் கொண்டு அதனிடம் தங்கள் பக்தியை
வலுவாக்கிக் கொள்கிறார்கள். இதில் பிள்ளையார் தோற்றுப் போனதாக மட்டும் ஒரு
கதையும் ப்ரஸித்தமாயிருக்கவில்லை. ஆனால் மற்ற ஸ்வாமிகள் இவரைப் பூஜித்ததற்கு நிறையக் கதைகள் இருக்கின்றன.
தந்தை பூஜித்த தனயர்
தகப்பனாரான ஈச்வரனையே எடுத்துக்கொள்ளலாம். அவர் த்ரபுர ஸம்ஹாரத்துக்காகப் புறப்படுகிறபோது பிள்ளையை - அவர் மரியாதை கொடுக்கப்பட்ட வேண்டிய பிள்ளையார் என்பதை மறந்து - ஸ்மரிக்காமலே கிளம்பினார். பிள்ளையார் தமக்கு வேண்டிய due -வைப் பெறாமல் விடமாட்டார்! 'பிள்ளையாருக்கு முதல் பூஜை' என்பது தேவதைகள் எல்லோருமாகத் தீர்மானித்தது.அப்படியிருக்க, ஒரு ரெஸொல்யூஷன் ஏகமனதாகப் பாஸ் ஆகிச் சட்டமாய் விட்டதென்றால் அதைத் தகப்பனாராகத்தான் இருக்கட்டும், அந்தத் தகப்பனார் ஸர்வ ஜ்கத்துக்கும் ஈச்வரராகத்தான் இருக்கட்டும், மீறினால் குற்றம் தானே? தப்புச் செய்தவரைப் பிளளையார் சும்மா விடமாட்டார்.
ஆகையால் த்ரிபுராஸுரர்களை நோக்கி ஈச்வரனின் ரதம் போய்க்கொண்டிருக்கும் வழியில் அதன் அச்சு முறிந்து போகும்படியாகப் பிள்ளையார் பண்ணிவிட்டார். ரதம் நின்றுபோய்விட்டது. உடனே ஈச்வரனுக்குப் புரிந்துவிட்டது. 'ரொம்பவும் பெரியவனாகையால் நமக்குச் சட்டம் இல்லை என்று இருப்பது தப்பு. ரொம்பப் பெரியவனாயிருப்பதாலேயே நாம் தான் லோகத்துக்கெல்லாம் உதாரணமாக நடந்து காட்ட வேண்டும். அதன் படி சட்டத்துக்கு ரொம்பவும் அடங்கிப்போக வேண்டும். சட்டம் என்று வருகிறபோது அப்பா பிள்ளை முதலான உறவுகளுக்கு இடமில்லை, என்று பரமேஸ்வரன் நினைத்தார்.
உடனே, கொஞ்சங்கூட ஸ்தானம் பார்க்காமல் பிள்ளையாருக்குப் பூஜை பண்ணினார். (இன்னொரு ஸந்தர்ப்பத்தில் இளைய பிள்ளையிடமும் கீழ்ப்படிந்து ப்ரணவோபதேசம் வாங்கிக் கொண்டிருக்கிறார்!) பிள்ளையாரும் அப்பா கொஞ்சம் நினைத்தவுடனேயே ஒடிவந்து விக்னத்தை அகற்றிவிட்டார். அதற்கப்புறம் ரதம் ஒடி, முடிவில் 'த்ரிபுராந்தகர்' என்று பெரிய பெயர் வாங்கும்படியாக ஈச்வரன் அந்த அஸுரர்களை ஜ்யித்தார். செங்கல்பட்டுக்கும் திண்டிவனத்துக்கும் நடுவில் "அச்சரப்பாக்கம்" என்று இருக்கிறதே, அந்த ஊர்தான் ஈச்வரனுடைய ரதத்தின் அச்சு இற்றுப்போன "அச்சிறுப்பாக்கம்"என்று சொல்வார்கள்.
ஸமீபகால ஸம்பவத்தில் புராண நிருபணம்
அப்படிச் சொல்வது நிஜந்தானென்று நிரூப்பிக்கிறதாக ஸமீபத்தில் ஒன்று நடந்தது. ராமேச்வரத்தில் சங்கர மண்டபம் கட்டிக்கொண்டிருந்தோம். அதில் ப்ரதிஷ்டை செய்யவேண்டிய ஆசார்யாள் பிம்பத்தை லாரியில் எடுத்துக் கொண்டு போயிற்று. ஜெய்ப்பூரிலிருந்து ஸலவைக்கல் தருவித்து காஞ்சிபுரத்தில் ஆசார்யாளுக்கும், அவருடைய நாலு சிஷ்யர்களுக்கும் பெரிசு பெரிசாக பிம்பம் பண்ணி அங்கேயிருந்து ராமேச்வரத்துக்கு லாரியில் எடுத்துக் கொண்டு போயிற்று. அப்போது வழியில் ஸரியாக இந்த அச்சிறுப்பாக்கத்திலேயே லாரி Break down ஆகி நின்று விட்டது! அப்புறம் பிள்ளையாரக்கு நூற்றியெட்டுத் தேங்காய் உடைத்து விட்டே, லாரியைப் பழுதுபார்த்துக் கிளப்பிற்று. அதற்குப் பிற்பாடு எந்த
விக்னமுமில்லாமல் கும்பாபிஷேகம், ப்ரதிஷ்டை எல்லாம் ஜாம்ஜாமென்று நடந்தது. இந்த விக்னமும்கூட அநுக்ரஹம் என்று தான் தோன்றிற்று. தாம் கைலாஸ சங்கரனேதான் என்று நமக்கு உறுதிப்படுத்துவதற்காகவே நம்முடைய சங்கரபகவவத் பாதாள் இங்கே தம்முடைய நவீனகால ரத அச்சான லாரி ஆக்ஸிலை முறித்துக்கொண்டிருக்கிறரென்று தோன்றிற்று.
அன்னைக்கு உதவிய ஜங்கரன்
அம்பாளும் விக்நேச்வரரை உத்பவிக்கப்பண்ணி அவர் ஸஹாயத்திலே ஜயம் பெற்றாளென்று லலிதோபாக்யானத்தில் வருகிறது. லலிதாம்பிகை பண்டாஸுரனோடு யுத்தம் செய்த போது சக்திஸேனை என்பதாக முழுக்கவும் தேவஸ்த்ரீகளையே கொண்ட படையோடு போனாள். போய்ப் படைவீடாக ஒரு அக்னிக்கோட்டை கட்டப்பண்ணி அதற்குள் ஸேனா ஸழூஹத்தோடுகூட முகாம் போட்டிருந்தாள். பண்டா ஸுரனுக்கு மந்த்ரபலம் நிறைய உள்ள விசுக்ரன் என்ற ஒரு அஸிஸ்டன்ட் இருந்தான். அவன் என்ன பண்ணினானென்றால் விக்ன யந்த்ரம் என்ற ஒன்றைப் பண்ணி அதை அக்னிக் கோட்டைக்குள்ளேபோய் அம்பாளின் கூடாரத்தில் விழும் படியாக MCP எறிந்தான். அந்த யந்திரத்தின் தன்மை என்னவென்றால், இந்த நாளில் Psychological warfare என்கிறார்களே, அப்படி அது எதிராளியை பௌதிகமாகத் தாக்காமல் அவர்களுடைய மனஸையே சத்ருபக்ஷமாக மாற்றிவிடும், இப்போது propaganda வினால் (பிரசாரத்தினால்) கொஞ்சம் கொஞ்சமாக மனஸை மாற்றுகிற மாதிரியில்லாமல். மந்திரசக்தி வாய்ந்த யந்த்ரமாதலால் அது உடனேயே மன மாறுதலை உண்டாக்கிவிடும்,
விக்ன யந்த்ரம் வந்து விழுந்தவுடன் அதன் மயக்கும் சக்தியால் சக்திஸேனைகளின் புத்தியே மாறிவிட்டது."எதற்காக அஸுரர்களை நாம் கொல்லணும்? இது ஜீவ ஹிம்ஸைதானே? அம்பாளுக்கு அவர்களிடம் விரோதமென்றால் நமக்கென்ன வந்தது? இன்னம் அடி அஸ்திவாரத்துக்கே போனால் எதற்காக இந்த அம்பாளுக்கு அடங்கி நாம் வேலைக்காரப் பிழைப்புப் பிழைக்கணும்? நம்மால்தான் அவளுக்கு பலம் என்பதால்தானே நம்மைச் சேர்த்துத் திரட்டிக் கொண்டு வந்திருக்கிறாள்? இத்தனை நாளாக நாம் என்னவோ புத்தியில்லாமல் அவள்தான் நமக்கெல்லாம் மேலே, அவளுக்கே நம்மை அடக்கி ஆள்கிற பலம் இருக்கிறது என்றெல்லாம் நினைத்துக்கொண்டு ஏவல் செய்து விட்டோம். இப்போது நாம் என்ன செய்ய வேண்டுமென்றால் ஆயுதங்களைப் போட்டு விட்டு அப்படியே ஸ்ட்ரைக் பண்ணிவிடவேண்டும் யஜமானி-பணியாளி என்கிற கதை இனிமே பலிக்காது. எல்லாரும் ஸமம்தான்" என்றெல்லாம் அந்த ஸேனைகள் ட்ரேட் யூணியனிஸம், கம்யூனிஸம் எல்லாம் பேச ஆரம்பித்து விட்டன.
"வேர்க்க விருவிருத்துக்கொண்டு, அடியும் குத்தும் பட்டுக் கொண்டு இனிமேலே இவளுக்காக யுத்தம் செய்ய வேண்டியதில்லை. நாம் பாட்டுக்கு நிர்விசாரமாகத் தூங்கலாம். அக்னிக் கோட்டைதான் இருக்கவே இருக்கிறது. அதைத் தாண்டி யாரும் வந்து நம் தூக்கத்தைக் கெடுக்க முடியாது" என்று சொல்லிக்கொண்டு ஸேனா ஸமூஹம் முழுக்கப்படுத்திக்கொண்டு 'கொர் கொர்' என்று குறட்டை விட
ஆரம்பித்துவிட்டன. புத்தியை முதலில் மாறாட்டமாகக் கலக்கிவிட்டு, அப்புறம் அது ஸ்தம்பித்துச் செயலிழந்து தூங்கும்படிச் செய்யும் சக்தி விக்ன யந்த்ரத்துக்கு இருந்தால் இப்படி நடந்தது. ஜ்ரும்பணாஸ்த்ரம் என்று ஒன்று உண்டு. அதை போட்டுவிட்டால் அதற்கு ஆளாகிறவர்கள் கொட்டாவி கொட்டாவியாக விட்டுக்கொண்டு அசந்து விழுந்துவிடுவார்கள். 'ஜ்ரும்பணம்' என்றால் 'கொட்டாவி விடுவது'
நவீன கால ஆயுதங்களைவிட பயங்கரமான விசித்ரமான ஆயுதங்தளை மந்த்ர சக்தியாலேயே ஆதிகாலத்தில் செய்திருக்கிறார்களென்று புராணத்திலுள்ள விவரங்களைப் பார்த்தால் தெரியும். ப்ரஹ்மாஸ்த்ரம், நாரயணாஸ்த்ரம், பாசுபதாஸ்த்ரம் முதலியவற்றின் சக்தியைப் பற்றிப் படிக்கும்போது ஆடம் பாம் (ப்) ,ஹைட்ரஜன் பாம் (ப்) எல்லாம் ஒன்றுமேயில்லை என்று தோன்றும். இப்போது இந்த பாம் (ப்) களின் ரேடியேஷனால் கர்ப்பசேசேத மேற்படுகிறது என்கிறார்களென்றால், அந்தக் காலத்தில் அச்வத்தாமா போட்ட அபாண்டவாஸ்த்ரம் உத்தரையின் கர்பபத்திலிருந்த சிசுவைப் பாதித்திருக்கிறது! கிருஷ்ண பரமாத்மாதான் அதை ரக்ஷித்துக் கொடுத்தார். அம்பாள் தன்னுடைய படைகள் ஸ்ட்ரைக் பண்ணிவிட்டு ஆனாலும் நல்லவேளையாக sabbotage (நாசவேலை) செய்யாமல், அமர்க்களமாய் டெமான்ட்ரேஷன்கூடச் செய்யாமல் அததுகளும் நன்றாகத் தூங்கிக்கொண்டு கிடப்பதைப் பார்த்தாள். ஞானஸ்வரூபிணியாக இருக்கப்பட்ட அவளுக்குத் தெரியாததா? இதெல்லாமும் அவள் லீலைதான்!
விக்நேச்வரரின் ப்ரபாவம் வெளிப்படவேண்டுமென்றுதான் அவளே இப்படி ஒரு விக்னத்தை விசுக்ரன் என்ற வ்யாஜத்தில் உண்டாக்கிக் கொண்டிருந்தாள். சிவ - சக்திகளாக எப்போதும் இருப்பவர்களில் சக்தியே பண்டாஸுரனை வதைப்பதற்காக இப்போது லலிதாம்பிகையாக ஞானாக்னி குண்டத்திலிருந்து தோன்றியிருந்தாள். கல்யாணமாகாதா கன்னியாக இவள் யுத்தத்துக்குப் போகக் கூடாது என்பதனால் இவளை விவாஹம் செய்துகொள்வதற் கூடாது என்பதனால் இவளை விவாஹம் செய்துகொள்வதற்காக சிவனும் காமேச்வரர் என்ற ரூபத்தில் வந்தார். கல்யாணம் ஆயிற்று. காமச்வர - காமேச்வரி என்று அந்த தம்பதியைச் சொல்வது வழக்கம். அந்த காமேச்வரிதான் நம்முடைய காமாக்ஷியாக இருப்பது. அவளுடைய ஸ்தானம்தான் காமகோடி பீடம்.
கல்யாணமானவுடன் பண்டாஸுர வதத்துக்காகப் புறப்பட்ட அம்பாள் ஈச்வரனைக் காமேச்வரனாக வரவழைத்தது மட்டும் போதாது, தன்னுடைய அருமைக் குழந்தை கணபதியையும் இந்த லலிதாம்பிகை ஆவிர்பாவத்தில் வரவழைத்து அவன் பெருமையை ப்ரகடனப்படுத்த வேண்டுமென்று நினைத்தாள். அதற்கு வாய்ப்பாகவே இப்போது சக்தி ஸேனை விக்ன யந்த்ரத்தால் தூங்கிக்கொண்டு கிடந்தது. உடனே காமேச்வரன் மேல் தன் ப்ரேம கடாக்ஷத்தைச் செலுத்தி மந்தஸ்மிதம் (புன்னகை) செய்தாள் அம்பாள். அவர் முகத்திலும்
மந்தஹாஸம் படர்ந்தது. இப்படி ஆதி தம்பதியின் பரஸ்பர அன்பில் உண்டான சிரிப்பின் காந்திஸமூஹம் ஒன்று சேர்ந்ததோ இல்லையோ, அதிலிருந்தே மஹா கணபதி உத்பவித்துவிட்டார்! ஆனந்த ஸ்வருபமாக, எப்போழுதும் ப்ரஸன்ன முகமாக, ஸுமுகராக இருக்கிற அவர் ரொம்பவும் பொருத்தமாக, ஸாக்ஷாத்
அம்பாள் ஈச்வரன் ஆகியவர்களின் முகத்திலிருந்து பெருகுகிர சிரிப்பு ஒன்று சேர்ந்ததிலிருநது உத்பவித்துவிட்டார்.
பிள்ளையாரின் பல ஆவிர்பாவங்களில் இது லலிதோபாக்யானத்தில் வருவது. லலிதோபாக்யானம் என்பது பதினெட்டுப் புராணங்களில் ஒன்றான ப்ரஹ்மாண்ட புராணத்தில் வருகிறது. ஈச்வரனின் முகத்தைப் பார்த்துச் சிரித்தே அம்பாள் பிள்ளையாரை அவதரிக்கச் செய்ததை லலிதா ஸஹஸ்ர நாமத்தில் "காமேச்வர முகாலோக கல்பித ஸ்ரீ கணேச்வரா" என்று சொல்லியிருக்கிறதது. எந்த தேவவதையானாலும் தன் சக்தியெல்லாம் எவளருத்தியின் அம்சலேசம்தானே அப்பேர்ப்பட்ட பராசக்தி, தானே விக்ன யந்திரத்தைச் சக்தியற்றதாகச் செய்திருக்கலாமாயினும், விக்ன நிவாரணத்துக்காகவே ஒரு விக்நேச்வரனை ஏற்படுத்தியிருக்கும்போது வர் ஸஹாயத்தினால்தான் இதைச் செய்ததாக இருக்கவேண்டுமென்பதத்காக இப்படி லீலை செய்தாள். அவள் இப்படி ஒரு சட்டத்துக்கு அடங்கியிருந்ததற்கேற்ப, அவளுடைய கடாக்ஷத்திலிருந்து உண்டான விக்நேச்வரரும், 'ஸஹாயத்தைத்தானே ஆனானப்பட்ட பராசக்தியும் நாடவேண்டியிருக்கிறது? என்று கர்வப்படாமல் அவளை நமஸ்காரம் பண்ணினார். பணிவோடு அவளோடு ஆசிர்வாதத்தை வாங்கிக்கொண்டே விக்ன யந்த்ரத்தை அழிப்பதற்காகப் புறப்பட்டார். அக்னிக் கோட்டையின் ஒரு மூலையில் யந்த்ரம் புதைந்து கிடந்தது. பிள்ளையார் அதைக் கண்டுபிடித்து, தந்தத்தால் குத்தித் தவிடு பொடியாக்கினார். உடனே தேவி கணங்கள் தூக்கம் கலைந்து எழுந்தன. அவற்றுக்கு ஏற்பட்டிருந்த மனோ பேதமும் மாறி, அம்பிகையிடம் பழையபடி பக்தி விச்வாஸம் கொண்டன. முன்னைவிட உத்ஸாஹமாக யுத்தம் செய்தன. முடிவில் பண்டாஸுரன் போனான்.